menu Menu
பத்மா தந்த பழம்
பயணம்
By பிரதீப் Posted in அபுனைவு, அனுபவம் on October 22, 2026 0 Comments 3 நிமிட வாசிப்பு
Instinct for Wings Previous Next

பத்மா தந்த பழம்

நான் வடுவூருக்கும் தஞ்சைக்குமான பேருந்து பயணங்களுக்கு இடையே பள்ளிப் படிப்பை முடித்தவன். இரண்டாவதில் இருந்து பன்னிரெண்டாவது வரை தஞ்சைக்குள் செல்ல பேருந்து பல வழிகளை கொண்டிருந்தது, காரணம் புதிய சாலைகளும் பாலங்களும். அப்படி சில ஆண்டுகள் தஞ்சையில் இருந்து வடுவூர் திரும்பும் பேருந்து காண்வண்ட் வந்து, லோ பிட்ஜ் இறங்கி வலதுபுறம் ஓரியல்டல் புறம் திரும்பால் தர்ப்போது வலதுபுறம் பிட்டர் இங்லாண்ட் கடையும் இடதுபுறம் டீ கடையும் இருக்கும் சாலையில் பல மார்கெடின் பலகடைகள் மேல் புழுதி அள்ளி அடித்து செல்லும்.

சாலை நெடுகிலும் நீண்டு இருக்கும் பல மார்க்கெட்டுக்கு எதிர்புரமும் சாக்கடைகள் தெரு மூலைகள் கடை ஓரங்கள் எங்கும் கெட்ட கெட்டுக் கொண்டிருக்கிற ஆரஞ்சுகள் கொட்டி கிடக்கும். அந்த வயதில் கெடப்போகும் அந்த ஆரஞ்சுகளை முன்பே சாலையில் வருவோருக்கும் போவோருக்கும் இலவசமாகக் கொடுத்தால் என்ன. நமக்கு கொடுத்தால் என்ன என்று யோசிப்பேன்.

நானும் நண்பர் மனோவும் இந்த ஆகஸ்ட் துவக்கத்தில் லடாக் பயணம் சென்று வந்தோம். அங்கே லே யில் இருந்து பாஸ்கோ என்ற இடத்திற்கு ஸ்கூட்டியில் சென்று கொண்டிருந்தோம். போகும் வழியில் சாலையோரம் ஒரு வாலியை வைத்து கொண்டு அமர்ந்திருந்த பாட்டி வழி மறைத்தார். நான் வண்டியை அருகே நிறுத்தினேன். அவர் சில ஆப்பிரிகாட் பழங்களை எங்களுக்கு நீட்டினார். வாங்கி உண்டு கொண்டே “கீத்னா” என்று கேட்டேன். “நகீ நகீ” என்று சொல்லியபடி அந்த லடாக்கிய மூதாட்டி மேலும் பழங்களை தந்தபடி இருந்தாள். பாட்டியின் அருகே சென்று அமர்ந்த மனோவின் பையைத் திறக்க சொல்லி அதில் தன் வாலியில் இருந்து பழங்களை அள்ளி போட்டு கொண்டே இருந்தாள். மனம் பேதளித்தவளோ என்று கூட எனக்கு சந்தேகம் வந்தது. ஆனால் இடையே இன்னொரு வேலை ஆளுக்கு வேலைகள் சொல்லி கொண்டிருந்தாள்.

விலைக்கு வாங்கி கொள்கிறேன் என்று சொன்னால் நகீ தான். நான் என் பையில் வைத்திருந்த ஆப்பிள்களில் இரண்டை எடுத்து பண்டமாற்றாகத் தர முயன்றேன். மறுத்தேவிட்ட அவள் என் வற்புறுத்தலுக்காக ஒன்றை வாங்கி கொண்டு, படல்களை திறந்து எங்களை அவளின் வயலுக்கு அழைத்து சென்றாள். பின் தான் அவள் முன் சொன்னது புரிந்தது, அவள் வயலில் ஆப்பிரிகாட் ஆப்பிள் மரங்களோடு இணைந்து இன்னும் சில மரங்கள். உள்ளே அழைத்து சென்று எங்களுக்கு சுற்றிக்காட்டினாள். 

மனோ பாட்டிக்கு கொக்கு செய்து கொடுத்து புகைப்படங்கள் எடுத்து கொண்டிருக்க நான் பின்னால் ஓடி கொண்டிருந்த நதி சென்று நின்று பார்த்து கொண்டிருந்தேன். இமையத்தின் நதிகள் ‘கண் நதி வண்ண பெருக்கு’ நான் முன்பு எழுதிய கவிதை வரியை இந்த பயணம் முழுக்க நினைவுபடுத்தியபடி இருந்தது.

தஞ்சையில் அழுகப் போகும் அந்த பழங்களை எனக்கு தரலாமே என்ற அந்த சிறுவயது ஏக்கம் எனக்கு இந்த வயதில் ‘சந்தை’ (market) என்பதை புரிந்துகொள்ள வைத்திருந்தது. ஒரு சந்தை அப்படிதான் இயங்கும் போல அல்லது அப்படிதான் இயங்க முடியும் போல. இன்னும் பொருளியல் கோட்பாடுகளை படித்தால் இதை என்னால் சரியாக புரிந்துகொள்ளக் கூடும். இப்பொழுது இது அனுபவ அறிவுகள். நாளை அழுகப் போகும் ஒரு பொருளை இன்று இலவசமாக கொடுக்கவோ அல்லது அடிமாட்டு விலையில் தரவோ சந்தை சம்மதிக்காது. தூக்கிபோட்டு அதை வீணாக்க தான் சந்தை அனுமதிக்கும். அடிப்படை விலை என்ற ஒன்றை தற்க்காத்துகொள்ள ஒரு பயண்மிக்க பொருளை அது வீண்ணடிக்க கூட செய்யும். காரணம் வாடிக்கையாளர்கள் அழுகும் வரை காத்திருந்து இலவசமாக வாங்க முற்படுவார்கள் பின் சந்தை மதிப்பு குழம்பி விடும். அப்படியான குரூரமான சந்தை கோட்பாடை பின்னால் கொண்ட தஞ்சையின் பலமார்க்கெட் கடைகள் குப்பையில் போடும் ஆரஞ்சுகளை பார்த்து நான் வயிறு எரிந்திருக்கேன்.

நதியை பார்த்து விட்டு வந்து பாட்டியிடம் கேட்டு ஆப்பிள் மரத்தில் இருந்து ஒரு ஆப்பிளை பறித்து உண்டேன். மனோ பாட்டியின் பெயரை விசாரித்தான். பாட்டியின் பெயர் “பத்மா”. பாட்டியின் காலை தொட்டு ஆசீர்வாத் என கேட்டு வாங்கிக்கொண்டேன். பாட்டி “பேட்டா” என ஏதோ சொன்னாள். மனோவும் என்னை பின் தொடர்ந்து ஆசீர்வாதம் வாங்கி கொண்டான். பின் விடை பெற்று கிளம்பினோம். பத்மா பாட்டிக்கு அத்தனை அழகான சிரிப்பு. இலவசமாக இந்த உலகுக்கு ஒன்றை தர முடிந்தவர்களால்தான் அப்படி சிரிக்க முடியும்.

பயணம் முடிந்தது சில நாட்கள் கழித்து வடுவூருக்கு வீடுக்கு வந்தேன். அப்பாவும் நானும் ஏதோ ஏதோ பேசிக்கொண்டிருந்தோம். இயல்பாக பேச்சு பழங்களை பற்றி வந்தது. தண்ணீர் கூட ஊற்றாமல் வீட்டு வாசலில் இனிமையான பழங்களைத் தரும் கொய்யாவை பற்றி என்று நினைவு. ஒரு மரம் பழத்தை நாம் பறிக்க வேண்டும் என்றுதான் இனிமையை தன்னுள் வைத்திருக்கிறது என்று அவரிடம் சொன்னேன் மேலும் அது நமக்கு இனிமை தருவதற்காக மட்டும் அல்ல அந்த விதையை கொண்டு சென்று நாம் வேறு எங்கோ போடவும் தான் அந்த இனிமை. மரம் நாம் பலத்தை பறிக்க விரும்புகிறது. மரம் கூட பழத்தை இலவசமாகவும் காரணம் இன்றியும் தருவதில்லை. இந்த கொடுக்கல் வாங்கல்களுக்கு மத்தியில் காரண காரியங்களுக்கு மத்தியில் அந்த பத்மா பாட்டி தந்த பழம் இலவசம்தான்.

*

[10.11.2026]


Previous Next

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Cancel Post Comment

keyboard_arrow_up