menu Menu
8 articles filed in
கலை-இலக்கியம்-பண்பாடு
Previous page Next page Next page
தமிழில் இருக்கும் பின் நவீனத்துவ நாடக இயக்கம் : உரையாடல்

நவீன நாடகம் பற்றிய உரையாடல்

தமிழில் இருக்கும் பின் நவீனத்துவ நாடக இயக்கம் – உரையாடல் விக்னேஷ் ஹரிகரன் இந்த மே மாத சொல்வனம் இதழில் “நமக்குத் தேவை நவீன நாடகங்கள்” என்ற கட்டுரையை எழுதி இருந்தார். அதில் ச. முருகபூபதி யின் இடம் சரியாக மதிப்பிடபடவில்லை என்று நினைத்தேன். அதேபோல அவர் நாடக கலை செல்ல வேண்டிய திசை என்பதை குறித்து சொல்லும் கருத்துக்களோடும் நான் மாறுபட்ட கருத்துக்களை கொண்டுள்ளதால் இந்த பதிவை எழுதுகிறேன். *** பொது பார்வையாளர்கள் என்பது யார்? […]

By பிரதீப் Posted in அபுனைவு, கலை-இலக்கியம்-பண்பாடு on October 22, 2026 0 Comments 12 நிமிட வாசிப்பு Continue reading
இரு அன்னைகள்: சுரேஷ்குமார இந்திரஜித் குறுங்கதைகள்

இலக்கிய கட்டுரை

இரு அன்னைகள்: சுரேஷ்குமார இந்திரஜித்தின் குறுங்கதைகள் முதலில் டெஸ்ட் கிரிக்கெட் கண்டுப்பிடிக்கப்பட்டு உலகம் முழுவதும் விளையாடப்பட்டு ரசிக்கப்பட்டு வந்தது. அதற்க்கு பதிலாக அப்பொழுதே டி.20 கிரிக்கெட் அறிமுகமாகியிருந்தால் அது மிகவும் சளிப்புதரக்கூடிய வடிவமாக இருந்திருக்கும். ஏன் ஒரு காலக்கட்டம் காலத்தை போக்குவதையும் மற்றொரு காலக்கட்டம் விறுவிறுப்பையும் தன் இயல்பாகவும் கொண்டிருக்கிறது. முக்கியமாக, இது போன்ற வடிவங்கள் ஏன் பெரியவையில் இருந்து சின்னது நோக்கி நகர்கிறது. முதலில் டெஸ்ட் கிரிகெட்டும் அடுத்து ஒருநாள் போட்டியும் அதன் பின் இருபது […]

By பிரதீப் Posted in அபுனைவு, கலை-இலக்கியம்-பண்பாடு on October 22, 2026 0 Comments 8 நிமிட வாசிப்பு Continue reading
பஷீரின் புன்னகைக்கு பின்னால்

இலக்கிய பார்வை

பஷீரின் புன்னகைக்கு பின்னால் பஷீரின் இந்த போஸ்டர் அதிகம் பகிரபடுவதை பார்க்கிறேன். நானும் இதை பத்திரப்படுத்தி வைத்து கொண்டேன். பஷீரை நாம் எழுத்தாளர்களில் ஒரு மெய் ஞானியாக கேள்விப்பட்டிருப்போம். ஆனால் பஷீர் பைத்தியமாக இருந்திருக்கிறார். பல முறை மன நல மருத்துவமனைகளில் இருந்துள்ளார், அந்த காலகட்டங்களில் யார் கட்டுபாட்டையும் மீறி பிறரை தாக்குபவராகவும் பொருட்களை உடைப்பவராகவும் படித்திருக்கிறேன். தன் ஆரம்பகால கதைகள் பலவற்றை எதிர்மறை தன்மை ஓங்கி இருப்பதாக அவரே அழித்துவிட்டதாக படித்திருக்கிறேன். இந்தியாவில் நவீனத்துவ காலக்கட்டம், […]

By பிரதீப் Posted in அபுனைவு, கலை-இலக்கியம்-பண்பாடு on October 22, 2026 0 Comments 3 நிமிட வாசிப்பு Continue reading
அஜீதன் உரை - விவாதம்

இலக்கிய உரையாடல்

அஜீதன் உரை – விவாதம் அஜிதன் ஏற்புரை | ‘மருபூமி’ சிறுகதை தொகுப்பு வெளியீடு | Ajithan speech https://www.jeyamohan.in/195671 அஜீதனின் உரை கேட்டேன் அவர் சொல்வதை போல கரடுதட்டி போயிருந்த மரபுக்கு எதிராக அமைந்ததுதான் நவீனத்துவம். மரபு முன்வைத்த விழுமியங்கள் நம்பிக்கைகளை நவீனத்துவம் எதிர்த்தது. மரபு மதம் சொல்லும் அல்லது அதன் இலக்கிய முகங்கள் சொல்லும் நம்பிக்கைகளில் உள்ளடங்கியவந்தான் ஒரு தனிமனிதன் என்று சொன்ன போது அதை நவீனத்துவம் இல்லை என்று சொன்னது. அதேபோல மரபு […]

By பிரதீப் Posted in அபுனைவு, கலை-இலக்கியம்-பண்பாடு on October 22, 2026 0 Comments 5 நிமிட வாசிப்பு Continue reading
ஜார்ஜ் சாண்ட், தஸ்தயேவ்ஸ்கி - விவாதம்: என் கடிதம்

இலக்கிய உரையாடல்

ஜார்ஜ் சாண்ட், தஸ்தயேவ்ஸ்கி -விவாதம் : என் கடிதம் ஜார்ஜ் சாண்ட், தஸ்தயேவ்ஸ்கி – விவாதம் அன்புள்ள ஜெ, சைதன்யா எழுதிய ‘நிலவறை மனிதனின் அன்னை’ கட்டுரை வாசித்தேன். இந்த கட்டுரையும் சரி, சென்ற இதழில்  வெளியான ‘அந்த விடியலின் பேரின்பம்’, விக்னேஷ் ஹரிஹரன் எழுதிய ‘விலாஎலும்பின் விடுதலைப் பிரகடனம்’ ஆகிய கட்டுரைகளும் சரி, அறிவார்ந்தவை. முற்றிலும் ஐரோப்பிய உலகம், அதன் வரலாறு ஆகியவற்றில் கால் ஊன்றி  அவற்றின் சிந்தனை மற்றும் அழகியல் அரசியல் போக்குகளை ஆராய்பவை. […]

By பிரதீப் Posted in அபுனைவு, கலை-இலக்கியம்-பண்பாடு on October 22, 2026 0 Comments 4 நிமிட வாசிப்பு Continue reading
சேப்பியன்ஸ் -  மானுட வரலாற்றில் மகிழ்ச்சி

வாசிப்பு - வரலாறு

சேப்பியன்ஸ் – மானுட வரலாற்றில் மகிழ்ச்சி யூவால் நோவா ஹராரி-யின் சேப்பியன்ஸ்  நூலுக்கு இரண்டு அம்சங்கள் உண்டு. ஒன்று அதனுடைய வரலாற்று அம்சம். அது இதுவரையிலான மானுட வரலாறு எப்படி நிகழ்ந்துள்ளது, வரலாற்றில் இந்த நிகழ்காலத்தை மானுடம் வந்தடைய காரணமாக இருந்த முக்கியமான நிகழ்வுகள் என்ன என்ன, என்று வரலாற்றை அது தொகுத்து முன்வைக்கும் விதம். அறிவு புரட்சி, வேளாண் புரட்சி, மனிதகுல ஒருங்கிணைப்பு, அறிவியல் புரட்சி என்ற ஐந்து பகுதிகளின் வழியாக நூல் அதை செய்கிறது. […]

By பிரதீப் Posted in அபுனைவு, கலை-இலக்கியம்-பண்பாடு on October 22, 2026 0 Comments 7 நிமிட வாசிப்பு Continue reading

Previous page Next page

keyboard_arrow_up