menu Menu
பஷீரின் புன்னகைக்கு பின்னால்
இலக்கிய பார்வை
By பிரதீப் Posted in அபுனைவு, கலை-இலக்கியம்-பண்பாடு on October 22, 2026 0 Comments 3 நிமிட வாசிப்பு
அஜீதன் உரை - விவாதம் Previous இரு அன்னைகள்: சுரேஷ்குமார இந்திரஜித் குறுங்கதைகள் Next

பஷீரின் புன்னகைக்கு பின்னால்


பஷீரின் இந்த போஸ்டர் அதிகம் பகிரபடுவதை பார்க்கிறேன். நானும் இதை பத்திரப்படுத்தி வைத்து கொண்டேன்.

பஷீரை நாம் எழுத்தாளர்களில் ஒரு மெய் ஞானியாக கேள்விப்பட்டிருப்போம். ஆனால் பஷீர் பைத்தியமாக இருந்திருக்கிறார். பல முறை மன நல மருத்துவமனைகளில் இருந்துள்ளார், அந்த காலகட்டங்களில் யார் கட்டுபாட்டையும் மீறி பிறரை தாக்குபவராகவும் பொருட்களை உடைப்பவராகவும் படித்திருக்கிறேன். தன் ஆரம்பகால கதைகள் பலவற்றை எதிர்மறை தன்மை ஓங்கி இருப்பதாக அவரே அழித்துவிட்டதாக படித்திருக்கிறேன். இந்தியாவில் நவீனத்துவ காலக்கட்டம், இந்திய சுதந்திர போராட்டம் முடிந்து அரசியலில் நடைமுறை பழகிய காலம். தனிமனிதர்களால் ஆக கூடியது பெரியதாக ஒன்றுமில்லை என்று மெல்ல மெல்ல கண்டு உணர்ந்துகொண்ட காலக்கட்டம். சிவராம கார்ந்தோ, தாரா சங்கர் பந்தோபாத்தியாவே பார்த்த இந்தியா இல்லை நவினத்துவ எழுத்தாளர்கள் பார்த்தது.

உலகம் இயங்கும் விதத்தை சமூகம் இயங்கும் விதத்தை இரண்டாம் உலக போருக்கு முந்தைய அறிவியல் யுகம் கோட்பாடுகள் ஆக்கி புரிந்து கொண்டது. அதன் வழியாக உலகை மாற்றி அமைக்க முடியும் என்று நம்பியது. மார்க்ஸின் கம்யூனிசம், காந்தியின் காந்தியம், நடராஜ குருவின் One World போன்றவை அன்று உலகை மாத்தமுடியும் என்ற கனவின் வெவ்வேறு வடிவங்களே. உலகம் எங்கோ ஒரு காலக்கட்டத்தில் ஒரே மாதிரி சிந்திக்கும் என்பதற்க்கான சான்றுகள் இவை, அடுத்த யுகத்தில் சிந்திக்கும் சட்டகம் வேறு ஒன்றாக மாறி புதிக கோனத்தில் சிந்திக்க துவங்குகிறது.

எல்லா கனவுகளும் அடங்கி யதார்தத்தில் கால் வைத்த யுகம் தான் நவீனத்துவ காலக்கட்டம். இங்கே புதுமைப்பித்தன், சு.ரா, ஜி. நாகராஜன், லச்சூமி மனிவண்னன் (வெள்ளை பல்லி விவகாரம்), கன்னட எழுத்தாளர் யூ.ஆர். அனந்த மூர்தேதி போன்ற எழுத்தாளர்கள் எழுதிய எழுத்துகள் நவீனத்துவ காலகட்டத்தின் அர்த்தமின்மையையே அல்லது தனிமனிதன் தத்தளிப்பை பதிவு செய்பவை. அத்தனை உயரம் எழுந்த அம்பு தரையில் குந்தி நிற்காமல் பொத்தென்று விழுந்த ஏமாற்றம் பதிவான காலகட்டம்.

உலக அளவில் டால்ஸ்டாய், தாஸ்தாவஸ்க்கி போன்ற எழுத்தாளர்கள் நவீனத்திற்க்கு முந்தைய நம்பிக்கை யுகத்தை சேர்ந்தவர்கள். இந்தியாவில் நான் படித்ததில் சிவராம கார்ந்து, தார சங்கர் பந்தோபத்தியாய போன்றவர்கள் நவீனத்துவத்தின் முந்தைய காலகட்டத்தை சேர்ந்தவர்கள். ஒருவகையில் ஜெயகாந்தன் கூட அழகியல் ரீதியாக சற்றே அந்த காலகட்டத்தின் தீட்சித் தான். பஷீர் வாழ்க்கை அளவில் சுதந்திர போராட்ட இந்தியாவின் நீட்சியையும் அதற்க்கு பின்பாக யதார்தத்தின் காலகட்டத்தையும் பார்த்தவர். எழுத்தாளராக நவீனவகாலகட்டத்தில் யதார்த்தை எழுத்தி அதிலேயே அதை கடந்தவர் அவர்தான்.

சிந்தனையிலும் நம்மு தெரிந்தாளும் தெரியாமலும் பயண்படுத்தும் முறை “தொகுப்பது பகுப்பது”. கூட்டாக சிந்திக்கும் முறையிலும் இது இரண்டும் மாறி மாறி வெளிப்படும். நவீனத்துவத்திற்க்கு முந்தைய காலகட்டம் தொகுத்து பார்க்கும் காலகட்டத்தை சேர்ந்தது. நவீனத்துவம் ஒவ்வொன்றையும் பகுத்து தனி அலகு-ஆக ஒன்றை காணும் காலகட்டத்தை சேர்ந்தது. அதனால்தான் நவீனத்துவத்தின் லட்சிய வடிவம் சிறுகதையாகவும். அதற்க்கு முந்தையதின் லட்சிய வடிவம் நாவலாகவும் உள்ளது. நவீனத்துவத்தின் வடிவ கட்சிதத்திற்க்கு காரணமேகூட அதன் சிந்தனைமுறையில் உள்ள பகுக்கும்தன்மைத்தான் காரணம். தொப்பதற்க்கு கூடை தேவை. பகுப்பதற்க்கு கூரான கத்திதேவை.

பஷீரின் கதைகளங்கள் உண்மையில் குரூரம் ஆனவை. பலர் நினப்பது போல மகிழ்ச்சியானவை அல்ல. பாத்துமாவின் ஆடு நாவலோ, எங்க உப்பப்பாவுக்கு ஒரு யானை இருந்தது நாவலோ, உண்மையில் மானுட குரூரங்களை சித்தரிப்பவை, அதை பஷீர் மன்னித்து கதாபாத்திரங்களின் இடத்தில் தன்னை வைத்து பார்த்து எப்படி கடக்கிறார் என்பதில்தான் அவர் நவீனத்துவத்தை கடந்து செல்கிறார்.

பாத்துமாவின் ஆட்டை போலவே அந்த குடும்பத்தின் அனைத்து நபர்களும் பஷீர் என்ற நல்லுள்ளம் படைத்தவனை எப்படி பிடுங்கி திங்குகிறார்கள் என்பது தான் அந்த நாவலின் கதை. ஆனால் அவர்கள் மீது கோவம் வராதபடி அவர்களை தானும் மன்னித்து வாசர்களையும் மன்னிக்க செய்து புன்னகைக்க செய்கிறார். ‘சாய்வு நாற்காலி’ நாவலை போல ஒரு வீண் பெருமை பேசி அழிபவரை பற்றிய கதைதான் ‘எங்க உப்பாவுக்கு ஒரு யானை இருந்தது’ நாவலும். ஆனால் அதை ஒரு விளையாட்டாகவும் நகைச்சுவையாகவும் ஆக்கி அந்த கதாபாத்திரத்தை நம்மை புரிந்துகொள்ள செய்கிறார். நவீனத்துவத்தின் அதே துயரையும் யதார்த்தத்தையும்தான் பஷீர் எழுதுகிறார் ஆனால் தன் கருணையாலும் அன்பாலும் அதை கடந்துசெல்கிறார். இஸ்லாமிய மெய் ஞானத்தை பற்றி நேரடியாக அவர் எதுவும் எழுதவில்லை ஆனால் எழுத்தில் மெய் ஞானியாக வெளிபடுகிறார்.

பஷீரின் இடத்தை நிறப்பும்படி நான் தமிழில் எந்த எழுத்தாளரையும் வாசித்ததில்லை. எழுத்தாளர்கள் கலைஞர்களில் இந்த இரு வகையை நான் பார்க்கிறேன். Writers from soul and Writers from mind. கலைஞர்கள் எல்லோரும் இது இரண்டும்கும் இடையே இருப்பவர்கள்தான். ஆனால் பஷீர் தாஸ்தாவஸ்க்கி போன்றவர்கள் தங்களின் ஆன்மாவுக்கு மிக அருகே சென்று எழுதியவர்கள். பஷீரின் புன்னகைக்கு பின்னால் இருப்பது நவீன துவத்தின் கண்ணீர்.


Previous Next

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Cancel Post Comment

keyboard_arrow_up