menu Menu
7 articles filed in
புனைவு
Previous page Next page Next page
ஆண் ஒன்று பெண் ஒன்று

[சிறுகதை]

ஆண் ஒன்று பெண் ஒன்று [சிறுகதை] கடவுளின் கவிதை| பாடல் 1 கடலில் விழுந்தவனை காப்பாற்றகைநீட்ட விரும்புபவனே கவனமாக இருதன் கைகளின் பலத்திற்கு மேல்கருணை கொண்டவன் அகங்காரன் ** அது காத்தாயி அம்மனுக்கு திருவிழா நாள். திருவிழா என்றாள் ஊர் கூடி கோயிலை சுத்தம் செய்து, தெய்வத்தை வரவழைத்து குறைகேட்டு குறைசொல்லி, கரகம் எடுத்து, கிடாவெட்டி உண்டு மகிழும் நாள். இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை ஆடியில் நடப்பது. முந்தினம் மாலை முதலே ஊரின் ஒவ்வொரு வீட்டுக்கும் சொந்தபந்தங்கள் […]

By பிரதீப் Posted in புனைவு, சிறுகதை on October 22, 2026 0 Comments 12 நிமிட வாசிப்பு Continue reading
பட்டவன்

[குறுநாவல்]

பட்டவன் [குறுநாவல்] அங்கு ஒன்றாக சென்று கொண்டிருந்தோம். நானும் நடேசனும். நிறைந்த நிலவு. சீவிடுகளின் சத்தம். எப்பொழுதும் போல ஊரும் கரம்பையும்  வேறு வேறாவதன் அதிசயத்தை அப்பொழுதும் புதியதென உணர்ந்தேன். இரவுகளில் இந்த வேறுபாடு இன்னும் கூடுதலாக தெரிகிறது. விளக்குகள் அனைந்து ஊரே உறங்குவது போலவும் வயல்வெளி எதையோ நோக்கி திறந்திருப்பது போலவும் உள்ளது.  வானத்திலிருந்து பறவைகள் கிளைக்கு வருவது போல, நல்ல விவசாயிகள் வயல்களில் இருந்து வீடுகளுக்கு போகிறார்கள். “அப்பாவ இன்னும் காணும். வயலுக்கு போனவரு […]

By பிரதீப் Posted in புனைவு, குறுநாவல் on October 22, 2026 0 Comments 19 நிமிட வாசிப்பு Continue reading
பெயர்

[சிறுகதை]

பெயர் [சிறுகதை] 1 புல்லாங்குழல் முருகேசை உங்களுக்குத் தெரியுமா என்று கேட்டார் ஓவிய சார். நாங்கள் ஒற்றைப் பெருங்குரளில் “தெரியும் சார்” என்றோம். “அப்ப நேரா பாடத்துக்கு போயிரலாம்” “யாராது போய் ட்ராயிங் போர்டை எடுத்தாங்க” நான் வேணியிடம் முன்பே சொல்லி வைத்திருந்ததால் பையல்கள் வரிசையில் யாரும் எழுவதர்க்கு முன் நாங்கள் எழுந்து ஓடி விட்டோம். பள்ளியோடம் என்பது ஒற்றைப் பெரும் ஓட்டுச் சாய்ப்புதான். அதன் மூளையில் ஹெச்.எம் சாருக்கு மட்டும் ஒரு ரூம். ஆனால் பள்ளியோடத்து […]

By பிரதீப் Posted in புனைவு, சிறுகதை on October 22, 2026 0 Comments 15 நிமிட வாசிப்பு Continue reading
உயிர்மரம்

[குறுநாவல்]  

உயிர்மரம் [குறுநாவல்] 1 பூத்த மலர் சொரியும் பூவனத்தில் அவர்கள் விளையாடிக் கொண்டிருந்தனர். எல்லாம் குழந்தைகளும் சிறார் சிறுமிகளும். சிதறும் நெல்மணி கொத்தும் பறவைகள் என ஓசை. அங்கு அவர்கள் யாருக்கும் பெயரில்லை, பெயர் வைக்கும் வழக்கமும் அப்பொழுதில்லை. பெரிய உடல் கொண்டிருந்தவர்கள், விளையாடும் அக்குழந்தைகளை குட்டித் திரளாகவே பார்த்தனர். மக்கள் தங்களையும் திரளாகவே உணர்ந்தனர். அங்கிருந்த ஒவ்வொருவரும் அனிச்சையாக அருகிலும் பின்னும் பார்த்துத் தாங்கள் என்று உணர்ந்தபடி இருந்தனர். அங்கு தனியர்கள் என எவருமில்லை. விளையாடுமிடம் […]

By பிரதீப் Posted in புனைவு, குறுநாவல் on October 22, 2026 0 Comments 29 நிமிட வாசிப்பு Continue reading
ஆறு

[சிறுகதை]

ஆறு [சிறுகதை] இருபத்துநான்கு நாட்கள் நடைக்குப் பின் நாங்கள் எதிர்பட நேர்ந்தது ஒரு நதி. அந்த பேருந்து நிலையத்திலிருந்து முன்பின் அறியாத திசைநோக்கி நடப்பதென்றும் முதலில் எதிர்பட போவது நதியா மலையா என்று அப்பாவின் கேள்வியோடு அது வரும்வரை நடக்கும் இந்த முடிவை நானும் ஏற்றுக்கொண்டு நடக்க துவங்கினேன். முதல் நாள்  “நீ என்னடா நெனைக்குற நதியா மலையா” என்று கேட்டுக்கொண்டிருந்த அப்பா  மெல்ல உடல்நிலை, சாப்பாடு, இரவு தூங்குமிடம் என்பதைத் தாண்டி எதுவும் பேசாதவரானார். நானும் […]

By பிரதீப் Posted in புனைவு, சிறுகதை on October 22, 2026 0 Comments 9 நிமிட வாசிப்பு Continue reading
தூங்கிக்கொள்ளல்

[சிறுகதை]

தூங்கிக்கொள்ளல் [சிறுகதை] படுக்கையில் இருந்து எழுந்த சின்னவருக்கு முதலில் முழிப்பு தட்டவில்லை தன்னுணர்வையே அடைந்தார். மெல்லிய பதட்டம் உடலெங்குமேறக் கண்களைத் திறந்து பார்த்தார் அறை முழுவதும் கம்மியவெளிச்சம் ஊடுருவி இருந்தது. பால்க்காரனும் போய் விடியவும் துவங்கிவிட்டிருக்கிறது. நழுவிக் கிடந்த வேட்டியை சரி செய்துகொண்டு கொடுவாயில் வழிந்திருந்த நீரை புறங்கையால் துடைத்துக்கொண்டார். கண்ணில் ஒதுங்கியிருந்த பூளையை நடுவிரலால் துண்ணூரை எடுப்பதுபோல் ஒத்தியெடுத்து இடதுபக்க அறைச்சுவற்றில் தடவிவைத்தார். தான் இப்படி தூங்கிவிட்டது ஆச்சரியத்தை தராமல் நிம்மதி உணர்வைத் தரவே இதைதான் […]

By பிரதீப் Posted in புனைவு, சிறுகதை on October 22, 2026 0 Comments 17 நிமிட வாசிப்பு Continue reading

Previous page Next page

keyboard_arrow_up