menu Menu
சேப்பியன்ஸ் -  மானுட வரலாற்றில் மகிழ்ச்சி
வாசிப்பு - வரலாறு
By பிரதீப் Posted in அபுனைவு, கலை-இலக்கியம்-பண்பாடு on October 22, 2026 0 Comments 7 நிமிட வாசிப்பு
அன்றாடம் பற்றி: மூன்று கவிஞர்கள் Previous ஜார்ஜ் சாண்ட், தஸ்தயேவ்ஸ்கி - விவாதம்: என் கடிதம் Next

சேப்பியன்ஸ் – மானுட வரலாற்றில் மகிழ்ச்சி

யூவால் நோவா ஹராரி-யின் சேப்பியன்ஸ்  நூலுக்கு இரண்டு அம்சங்கள் உண்டு. ஒன்று அதனுடைய வரலாற்று அம்சம். அது இதுவரையிலான மானுட வரலாறு எப்படி நிகழ்ந்துள்ளது, வரலாற்றில் இந்த நிகழ்காலத்தை மானுடம் வந்தடைய காரணமாக இருந்த முக்கியமான நிகழ்வுகள் என்ன என்ன, என்று வரலாற்றை அது தொகுத்து முன்வைக்கும் விதம். அறிவு புரட்சி, வேளாண் புரட்சி, மனிதகுல ஒருங்கிணைப்பு, அறிவியல் புரட்சி என்ற ஐந்து பகுதிகளின் வழியாக நூல் அதை செய்கிறது. மானுடவரலாறுக்கான காரணங்களாக இந்த பகுதிகளை கூறி அவை நிகழ்வதற்கான காரணங்களாக அதன் உட்பகுதிகளை கூறி செல்கிறது இந்த நூல். இந்த வரலாற்று அம்சத்துடன் விவாதிக்கவேண்டியவர்கள் வரலாற்று அறிஞர்கள், மாணவர்கள். எனக்கு இந்த முதல் அம்சம் மானுட வரலாற்றை தொகுத்து கொள்வதற்க்கான கல்வியாகவே அமைந்தது.

இந்த நூலின் இரண்டாவது அம்சம் இதனுடைய சித்தாந்த கட்டுமானம். ஹராரி நிறுவ முயலும் கருத்து தரப்பு வெளிபடும் இடம். அது, மானுடர்களின் மகிழ்ச்சியை பற்றிய நூலின் அனுகுமுறை. இந்த நூலின் மிக பிரபலம் அடைந்த அம்சம் இந்த பகுதிதான் என்று நினைக்கிறேன். மனிதன் தன் ஆதியில் இருந்து இன்றுவரை அடைந்துள்ள வரலாற்று பரிணாமத்தின் ஊடாக தன்னுடைய மகிழ்ச்சியையும் சுதந்திரத்தையும் இயற்க்கை இயல்புகளையும் இழந்து வருகிறான் என்பதான் அது.

நியாண்டர்தாள் இனம் மனித இனத்தைவிட சிறந்தது-மகிழ்ச்சியானது. சேப்பியன்ஸ் இனம் அறிவு புரட்சி வழியாக  மிக வன்முறையாக ஆனது. வேட்டையாடி சமூகமான இருந்த போது மனிதன் சந்தோசமாக விடுதலையாக இருந்தான் ஆனால் வேளாண் புரட்சி அவனை ஒரு இடத்தில் கட்டி போட்டது. இவ்வாறாக ஹராரி மானுட வரலாற்றில் ஒரு நிலையிலிருந்து அடுத்த நிலை மேலும் துயரத்தையே தேடி தந்தது என்று சொல்கிறார். ‘வரலாற்றில் மகிழ்ச்சி’ என்பது பற்றி சிந்தனை சூழலில் நிலவ கூடிய பிற தரப்புகளை சொல்லி அதன் உடன் விவாதித்து ஹராரி தன்னுடைய தரப்பை சொன்னாலும், அது நூல் எழுத துவங்குவதற்க்கு முன்பே எழுத முடிவு செய்துவிட்ட சிந்தனை தரப்பை போன்று ஒலிக்கிறது. இந்த நூலின் ஹைப்பாத்திஸிசாக- நிறுவ முயலப்படும் யூகம்மாக கூட அதுவாகத்தான் இருக்கும் என்று நினைக்கிறேன். நூலின் மனிதனின் எதிர்காலம் பற்றிய இறுதி பகுதிக்கு முன்னால் உள்ள பகுதி மனிதனின் மகிழ்ச்சைபற்றி நூலின் தீர்ப்பு கூறும் பகுதிதான். மானுட வரலாறும் மகிழ்ச்சியும்தான் இந்த நூலின் பேசுப்பொருள்.

இரண்டாவது அம்சமான மகிழ்ச்சியை பற்றிய இதன் சித்தாந்த அனுகுமுறையுடன்தான் நான் முரண்படவோ விவாதிக்கவோ முயல்கிறேன். உதாரணத்திற்கு நூலின் ஆரம்ப பகுதிகளில் ஹராரி ஒரு நிகழ்வின் வர்ணனையை சொல்கிறார். அதை என் நினைவில் இருந்து இப்படி சொல்கிறேன், ‘நீங்கள் உங்களை இப்பொழுது சீனாவின் மிகமுக்கியமான நகரம் ஒன்றின் சாலையில் கார் ஓட்டி சென்று கொண்டிருப்பவாரக கற்பனை செய்துகொள்ளுங்கள், ஹாரன் சத்தங்கள் டிராஃபிக், ஆக்சிடண்ட் என்று இருக்கும் அந்த இடம், இப்பொழுது நீங்கள் சரியான நேரத்துக்கு அலுவலகம் சென்றாக வேண்டும் இல்லை என்றால் உங்கள் மேல் அதிகாரி உங்களை திட்டுவார், இத்தகைய சூழல் உங்களுக்கு எவ்வளவு எரிச்சலை தரும், இதுவே நாப்பது ஐம்பதாயிரம் ஆன்டுகளுக்கு முன் என்று வைத்துகொள்ளுங்கள் அப்பொழுது இதே இடம் எப்படி இருக்கும் என்று கற்பனை செய்துபாருங்கள்…ஒரு சிறுமி நீர் எடுக்க ஓடி கொண்டிருப்பாள் அவள் தோழி அவளை துரத்தி செல்வாள் அவர்கள் மலர் பறித்து விளையாடுவார்கள்..அது எவ்வளவு மகிழ்ச்சியாகவும் சந்தோசமாகவும் இருக்கும்’ இந்த தர்க்கம் தான் நூலின் இறுதிவரையில் இருக்கும்.. ஆனால் என்ன மேலே இருக்கும் ஆனிதரம் சற்றே வலு இழந்து இறுதியில் நிறுவபட்டிருக்கும்.

இந்த நூல் ஒரு ஆய்வு அளவுக்கு ஒவ்வொரு தரப்பையும் எடுத்து விரித்து மாற்று தரப்புகளை வாசித்து விவாதித்து நம் தரப்பை நிறுவியாக வேண்டிய நூலாக உள்ளது. நான் இந்நூலின் முக்கியமாக மிக பிரபலமாக விற்ற ஒரு பகுதியை பற்றி மட்டும் பேசுகிறேன். அது “வேளாண்புரட்சி தான் ஒட்டு மொத்த மனித துயரங்களுக்கும் காரணம்” என்பது போன்ற தொனி. நியாண்டர்தால் மற்றும் பிற மனித இனங்களைவிட அறிவு புரட்சி அடைந்த சேப்பியன்ஸ் எவ்வளவு மோசமானவன் என்பதை சொல்ல வேட்டையாடி மனிதன் நிகழ்த்திய ஒட்டுமொத்த வன்முறைகளையும் இயற்க்கை அழித்தொழிப்புகளையும் பட்டியல் போடுகிறார் ஹராரி. அடுத்து வேளாண் சமூகம் எவ்வளவு  சுகந்திரம் அற்ற இடத்தில் முடங்கி போனது, இயற்க்கை இயல்புக்கு புறம்பாக ஆனது, பிடிக்காத உணவை வேறு வழியின்றி உட்கொண்டது, கடுமையக உழைத்தது, பாலியல் சுகந்திரம் அற்று சமூக இயக்கத்துக்காக உறவுமுறைகளில் சிக்கிகொண்டது என்று சொல்லி, வேட்டையாடி சமூகம் வன்முறையானதாக இருந்த போதிலும் எவ்வளவு மகிழ்ச்சியானதும் சுகந்திரமானதும் என்று சொல்லி முன்னைய நிலையைவிட பின்னது மோசமானது என்று சொல்கிறது நூல். இந்த இடம்தான் பட்டி தொட்டி எங்கும் சென்று சேர்ந்த தரப்பு.

முதலில் வேடையாடிகளின் வன்முறைக்கான காரணமாக நான் நினைப்பத்ற்க்கும் ஹராரி நினைப்பதற்க்குமான காரணங்களில் உள்ள முரண்பாட்டை மட்டும் முதலில் சொல்லி முன் செல்கிறேன். முதல் பகுதியான ‘அறிவு புரட்சியில்’ இயற்க்கையில் உள்ள பிற விலங்குகள் அனைத்தும் ஒன்றும் அறியாத அப்பாவிகள் சப்பியன்ஸ் மட்டுமே மிகவும் வன்முறையானவர்கள் என்ற தொனி வெளிப்படுகிறது. நியாண்டர்தால் துவங்கி பிற மனித இனங்கள் வரை, மமூத்துகள் என என்ற உயிரங்களை சப்பியன்ஸ் கொன்றொழித்ததை பற்றி அதில் ஹாராரி பேசுகிறார். அதை தொடர்ந்து அமெரிக்காவிலும் ஆஸ்திரேலியாவிலும் உள்ள விலங்குகளை வேட்டையாடி சமூகமாக சாப்பியன்ஸ் கொன்றொழித்ததை பற்றி பேசி மனிதனாக இருப்பதன் அமெரிக்க பெருமிதத்தை மனதில் மாற்றி அமைக்க முயல்கிறார்.

என் தரப்பு. சாப்பியன்ஸ் இனம் என்பது உயிர் குலத்துக்கு புதியது, அது தன்னை தற்க்காத்து கொள்ளவும் வாழவும் தன் முயர்ச்சியை துவங்ககிறது. அதனுடைய இலக்கு இயற்க்கை ஆதிக்கம் செய்யகூடிய விலங்காக ஆகவேண்டும் என்பது, அப்பொழுதுதான் அது நீண்ட நாட்கள் வாழமுடியும் தன் இருத்தலை கொண்டாட முடியும். சேப்பியன்ஸ் இனம் உயிர் குலங்களின் படிநிலைகளில் (Hierarchy) உச்சிக்கு ஏற முயல கூடிய காலம்தான் அது வேட்டையாடியாக இருந்த காலம். எந்த விலங்கின் அதிகாரத்தின் கீழ் பிற இனங்கள் உள்ளதோ அதற்க்கு தகுந்தார் போல் ‘இயற்க்கையான உயிர் இனங்களின் ஒழுங்கு’ ஒன்று உருவாகி வரும். முன்னறே நிழவும் அந்த ஒழுங்கை குழைத்துதான் புதிதாக ஒரு உயிர் இனம் படிகளில் மேல் ஏறி செல்லமுடியும். மேல் ஏறி சென்ற பின் அதற்க்கு தகுந்த ஒரு ஒழுங்கு புதிதாக உருவாகியிருக்கும். மான் அதிகார பட்டினியில் மேல் இருக்கும் பொழுது இருக்கும் இயற்க்கை ஒழுங்கு ஒன்று, சிங்கம் இருக்கும் பொழுது இருந்த ஒழுங்கு பிறிதொன்று, மனிதன் இருக்கும் பொழுது இருக்கும் ஒழுங்கு வேறு ஒன்று. மேல் இருக்கும் விலங்கின் இயல்புக்கு ஏற்ப கீழ் இருக்கும் விலங்குகளின் எண்ணிக்கையும் இயல்பும் அமையும்.

எனவே வேட்டையாடி சமூகமாக இருந்த போது மனிதன் செய்த கொலைகளுக்கான மனிதனை இன்று ஹராரி குற்ற உணர்ச்சிகுள்ளாக்குவது, மானுட வெறுப்பில் இருந்து எழுந்த சிந்தனை வெளிப்பாடா என்று என்னால் எண்ணாமல் இருக்க முடியவில்லை. அதேசமையம் மேற்க்கு உலகம் அல்லது அமெரிக்காவின் மனித பெருமிதத்தை குறைப்பதை நோக்கமாக கொண்ட சார்ப்பும் அதனால் உண்டாகும் மிகைவெளிப்பாடுமா இந்நூல் என்றும் யோசிக்காமல் இருக்க முடியவில்லை. கூடவே ஆதாம் ஏவால் உண்ட ஆப்பில் என்ற தொன்மம் துவங்கி யூவால் நோவா ஹராரி வரை சிந்தனையில் ஒரு நீட்ச்சியும் பார்க்க முடிகிறது அதனால் அதன் முக்கியத்துவம் குறித்தும் எண்ணிப்பார்க்க வேண்டும் என்று எனக்கு நானே எச்சரித்துகொள்கிறேன். கலிகாலம் என்ற தோற்றம் அற்ற ஒரு கட்டம்-ஒரு வரலாற்று திருப்பம் கூடவா மனித வரலாற்றில் இல்லை என்ற எண்ணத்துடன்தான் நூலை வாசித்து முடிக்கவேண்டி இருக்கிறது.

அடுத்ததாக வேளான் புரட்சி பற்றி பேசி முடித்து கொள்கிறேன். அதைபோல் இளக்காரமாக பார்க்க படும் வேறு எதுவும் எனக்கு தெரியவில்லை. வேளாண் புரட்சி தான் மனிதனை இன்னொரு டைனோசர் ஆக்காமல் போன புரட்சி என்று நான் நினைக்கிறேன். நான் முன்பு சொன்னது போல படிநிலைகளில் மேல் ஏறி சென்று தனக்கான இயற்க்கை ஒழுங்கை உலகில் உருவாக்கி கொண்ட மனித இனம் தனக்கான நிலையான இடத்தை உருவாக்கி கொள்ள முயன்ற காலகட்டம் இது. யூவால் நோவா ஹராரி சொல்வது போல இது இயற்க்கைக்கு எதிராகவோ மனித இயல்புக்கு எதிரானதோ அல்ல. இயற்க்கையில் ஒவ்வொரு உயிரினமும் நிலையான இடத்திற்க்குதான் போராடிக்கொண்டிருகிறது, நிலையான இடத்தைதான் அது விரும்புகிறது அலைச்சலை அல்ல. வேட்டை சமூகம் இருந்த நிலை சுகந்திர நிலை அல்ல அது அலைச்சல், மகிழ்ச்சியான நிலை அல்ல அவர் சொல்வதைபோலவே அது வன்முறைகளின் காலம். ஹராரி அடுத்து பாலியல் சுகந்திரத்தை பற்றி பேசுகிறார். ஆதி மனிதன் பத்து பெண்களை புணர்ந்து அடைந்த இன்பதை இன்றைய நவீன மனிதன் ஒரு பெண் நடந்து செல்வதை வெறுமனே பார்த்தே அடைய முடியும். அதேயே நாம் உன்னதமாக்கல் என்று சொல்கிறேம். இன்று மனிதன் நடக்கும் நடைக்கும் நடனம் என்ற கலைக்கும் தொடர்பிருக்கிறது. இத்தனை ஆயிரம் வருட பரிணாமம் நமக்கு ஒரு மலரை சரிக்கவும் காற்றை ரசிக்கவும் சொல்லிகொடுத்திருக்கிறது. பறக்கும் பறவையை உணவு என்று பார்ப்பவனுக்கும் கவிதை என்று பார்ப்பவனுக்கும் உள்ள வேறுபாடு என்பதுதான் ஆதி மனிதனுக்கும் நமக்கும் உள்ள வேறுபாடுகளில் ஒன்று.

நாஞ்சில் நாடனின் ‘பாலம்’ என்ற சிறுகதை இதை விளங்கி கொள்ள மிக உதவியான கதை. காமத்துக்கு அப்பால் இன்பம் ஒன்றில்லை என்று நம்பும் கிராமமும், தற்ச்சமையம் காமத்தைவிட பிரதானமாக நிலவை நினைக்கும் ரசிக்கும் தம்பதியும் கதையில் வருக்கிறார்கள், இந்த இரண்டு எல்லைகளுக்கான பாலமாக ஒரு கிழவன் கதையில் வருகிறார். பரிணாமத்தில் ஒரு இன்பத்தை பலநூறில் காணுவதற்க்கான சாத்தியத்தை நாம் முயன்று உருவாக்கியிருக்கிறோம். நம் மனித மூளை அதற்க்கு தகுந்தார்போல் மாறியிருக்கிறது. ஆதி மனிதன் மலரை பார்த்தபோது அவனுள் சுரந்த அதே அளவு சுரப்பி அல்ல இப்பொழுது நம்முள் சுரப்பது. இந்த இடத்தில்தான் ஹராரி சொல்ல கூடிய வேட்டையாடி சமூகத்தின் பாலியல் சுகந்திரம் உட்சபட்ச இன்பத்தை தருகிறதா அல்லது இன்றைய நவீன கலை ரசிகன் இசை கச்சேரி ஒன்றில் உட்ச்சபட்ச்ச இன்பத்தை அடைகிறானா என்ற கேள்வியை எழுப்பி, நாமே அதில் தொனிக்கும் அபதத்தை எண்ணி பார்த்து கொள்ள வேண்டி இருக்கிறது.

இந்த வேளாண் புரட்சி பகுதியில் மனிதனின் முந்தைய நிலையை காட்டிலும் தற்போதைய மோசமான நிலையை உணர்த்த ஹராரி மேலும் பல காரணங்களை சொல்கிறார். அவை அவன் ஒரே இடத்தில் வாழ்ந்ததாள் சலிப்புற்று இருந்தான், வேட்டையைவிட கடுமையாக உழைக்கவேண்டி இருந்தது, தொழில்களையும் அதிகாரபடி நிலைகளையும் பிரித்து உருவாக்கிகொள்ள வேண்டியிருந்தது, மாமிச உணவை உண்டவனுக்கு தானிய உணவை உன்ன பிடிக்கவில்லை, கால்நடைகளுக்கு கொடுமை இளைப்பது என்பது போன்றவை அவை. இதில் ஒவ்வொன்றோடும் முரண்பட்டு அதற்கான நியாயங்களயும் அவசியங்களையும் சொல்லமுடியும். ஆனால் நான் ஒன்றை மட்டும் இப்பொழுது சொல்ல விரும்புகிறேன். அது ஹராரி சொல்வது போலவோ அல்லது இன்று பரவலாக பரிந்துரைக்கபடுவதை போலவோ கோதுமையோ அரிசியோ மனிதன் தேவையின்றி உன்ன கூடிய உணவு இல்லை என்பதை மட்டும்தான். பிரோண்டின் மனித உடலுக்கு அவசியாமா இருக்கலாம் ஆனால் மூலைக்கு அவசியாமானது சூகர்தான். (இனிப்பு தன்மை கொண்ட உணவு வகைகள் என்ற அர்த்தத்தில்). இனிப்பு தன்மை இல்லாத உணவை உண்டு அறிவாளி படியலில் மேலே இருக்கும் ஒரு விலங்கினத்தையாது இன்று இயற்க்கையில்(நிலத்தில்) யாரும் காட்ட முடியுமா. என்னக்கு தெரிந்த வரையில் அறிவாளி விலங்குளான குரங்கு, பன்றி, யானை, இவை மூன்றுமே இனிப்பு தன்மை உல்ல உணவை அதிகம் நாடுபவை, பழங்களை கிழங்குளை உப்பு சுவைகளை உண்ண விரும்புபவை, மனிதனை ஒத்த உணவு பிரியங்கள் கொண்டவை. இவைகள் எந்த வேளாண் புரட்சியை சந்தித்துவிட்டு இந்த இயல்பை அடைந்தன, அறிவை அடைந்தன ?

ஹராரி எதிர்காலத்தை குறித்து எச்சரிக்கும் பொழுது எனக்கும் பயம் உருவாகதான் செய்கிறது. இந்த நவீன யுகத்தில் மனிதன் விலங்குகளை பண்ணைகளில் வைத்து செய்யும் வியாபார வன்முறைகள் எனக்கும் கடுமையான ஒவ்வாமையை தருகிறது. ஆனால் நான் சொல்லவருவது எல்லாம் மானுட வரலாற்றின் ஒவ்வொரு அடுத்தகட்டத்திலும் மனிதனின் மகிழ்ச்சியும் சுகந்திரமும் அதிகரித்து கொண்டுதான் இருக்கிறது. இன்னொன்று நான் எண்ணுவதை சொல்கிறேன். மனித இனம் அடுக்கடுக்கான இந்த பரிணாம நிகழ்வுகளின் வழியாக தன்னை தன்னில் இருந்து பிரித்தறிவதை பயின்றிருக்கிறது, அதன் வழியாக இன்பம் இன்னும் பன்மடங்கு பெருகிறது. மனிதனில் மட்டும் அல்ல அது விலங்குளிலும் உள்ளது. எத்தனையோ உயிர் இனங்களில் என்னற்ற விலங்குகள் ஒவ்வொன்றுக்கும் தன்னைகாட்டிலும் தன் மைந்தர் முக்கியம்.

*

[13-4-2022]


Previous Next

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Cancel Post Comment

keyboard_arrow_up