இந்த கட்டுரையில் வெளிப்படும் என் தனி கருத்துகள் எவையும் என் அறுதியான கருத்துகள் அல்ல. அவற்றை நானே மறுக்க கூடும் கடக்க கூடும். அப்படியா ? என்று சிந்தித்து பாற்பதற்கான ஒரு முயற்சி மட்டுமே இது.
**
வாழ்க்கையை பற்றி நாம் தத்துவார்த்தமாக அதன் பொருள் சார்ந்து யோசிக்கும் பொழுது, இந்த தற்செயல்களையும் லட்சியவாதங்களையும் வைத்து அதிகம் குழப்பிக் கொள்வோம்.
அது இப்படியாக இருக்கலாம் “வாழ்க்கை முழுக்க தற்செயல்களால் ஆனது. வாழ்வுக்கு என்று பொருள் ஏதும்மில்லை. எனவே இங்கு ஆற்றி முடிக்க வேண்டிய எந்த அவசியமுமில்லை. நம்மால் முடிந்தவரை அன்பா இருந்துவிட்டு போவோம்.” வாழ்க்கையின் அடிப்படைகள் யதார்த்தங்கள் மீதான தவறான புறிதல் என்பது ஒன்றிலிருந்து அடுத்து என பெரிய சிந்தனை வலையாகி நம்மை முடக்கிவிடும் அபாயம் கொண்டது. எப்படி என்றால் நான் சமிபத்தில் படித்த வரி இது “இங்கு ஒருவர் மீது நாம் எவ்வளவு அன்பாக இருக்கிறோமோ அவ்வளவு வெறுக்கவும் செய்வோம்”. ஒருவேளை இக்கூற்று உண்மை என்றால் அன்பின் பாதை நம் இயல்பில்லை என்றால் நாம் உருவாக்கிகொண்ட அன்பு சித்தாந்தம் நமக்கே எவ்வளவு பெரிய தவறாக போய் முடியும்.
எனக்கும் இந்த சிக்கல் இருந்தது. நான் முதலில் மூற்கமும் பித்தும் கொண்ட லட்சிய வெறியில் இருந்தேன். பின் சில அனுபவங்கள் வாயிலாக இதையெல்லாம் ஏன் செய்யவேண்டும் என்று கேட்டு கடுமையாக குழப்பிக் கொண்டேன். இருநிலைகளிலும் அலகழிப்புக்குள்ளானேன். இப்பொழுது மெல்ல அடங்கி சமநிலையை நெருங்க முயல்கிறேன்.
அமெரிக்க சமூகத்தில் Forrest Gump திரைப்படம் உருவாகி வருவதில் முக்கியமான அம்சம் உண்டு. நான் பார்த்தவரையில் அமெரிக்க சமூகத்தின் பொது லட்சியம் millionaire ஆவது. அதற்காக நூல்கள் எழுதபடுகின்றன, கருதரங்கங்கள் நடத்தப்படுகின்றன, தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் அது ஒரு பேசுபொருள். இங்கிருந்து பார்க்கும்பொழுது அது எனக்கு வியப்பாக இருக்கும். Success pressure-ஆலும் pop culture-ஆலும் வதைபடுகிறார்கள். Bill Gates, McDonald’s, IPhone னும் தான் அவர்களின் முன் உதாரணங்கள். இந்தியாவின் பயணமும் அதை நோக்கியதாக தான் உள்ளது அல்லது அந்த பண்பாடு நம்மையும் உலகநாடுகளையும் உள் இழுக்கிறது. அமெரிக்காவில் பிரபலமாக ஆவதும் பணத்துடன் ஆடம்பரமாக வாழ்வதும் அத்தியாவசியமயாகி விட்டது என்றே நினைக்கிறேன். அதே சமையம் அந்த பிரபல பண்பாடுக்கு எதிரான இயக்கங்களும் அங்கு தொடர்ந்து நடந்தபடி உள்ளன. அதனால் தான் ஓஷோவுக்கும், கிழக்கு குருக்களுக்கும் அங்கு அத்தனை பெரிய வரவேற்பு, தலாய் லாமா இங்கை விட அமெரிக்காவில் பிரபலம். Minimalism போன்ற இயக்கங்களும், சமூக ஊடக பாதிப்பு பற்றியான விரிவான ஆய்வுகளும்,மனநலம் பற்றிய ஆய்வுகளும் அங்குதான் அதிகம் நடக்கின்றன. இந்த பிரபல பண்பாட்டிலிருந்து அதுகொடுக்கும் நெருக்கடியிலிருந்து பிய்த்துக்கொண்டு போக விரும்புவர்களான, பயணர்களும் தொலைந்துபோக விரும்புவர்களும் தான் “Into the Wild”, “wild” போன்ற அமெரிக்கதிரைப்படங்களின் கதாபாத்திரங்கள். ஆனால் அக்கதாபாத்திரங்களும் ஒருகட்டத்தில் முட்டி திகைத்து, செல்ல இடமில்லாமல் அன்பின் வழிக்கு திரும்புவதை பார்க்கலாம். அதற்க்கு அச்சமூகத்தின் பண்பாடு,மதம்,ஆன்மீக அம்சம் மற்றும் வாய்புகள் காரணம். அமெரிகாவின் இனொரு சிக்கல் பல காரணங்களால் அச்சமூத்தில் குடும்ப அமைப்பிலும் உறவுகளிலும் உண்டான உடைவுகள் கொடுக்கும் சிக்கலும் அதன் எதிர்விளைவுகளும். சமூக அழுத்ததுக்கும் தனிமனித அகத்திறக்குமான ஊராய்வு அமெரிக்க படங்களின் தொடர்ந்து வருவது, மிக சிறந்த உதாரனம் Taxi driver. தமிழில் இயக்குனர் ராம் படங்கள் அத்தகையது.
அமெரிக்காவில் அலபாமாவுக்கும், லாஸ் ஏஞ்சல்ஸ் நியூயார்க்கும்மான இடைவெளியும் ரொம்ப அதிகம். இந்த அமெரிக்ப சமூக பின்னணியில் இருந்து பல கேள்விகளோடு வாழ்க்கையை பார்க்கும் திரைப்படம் தான் Robert Zemeckis இயக்கி Tom Hanks நடித்து 1994 வெளிவந்த Forrest Gump என்னும் படம். Winston Groom என்ற எழுத்தாளரின் நாவலை கொண்டு உருவான இத்திரைப்படம் உலகம் முழுக்க பரவலாக பார்க்கப்பட்டு கொண்டாடப்பட்டது. Forrest Gump பற்றி எவளவோ பேசியும் எழுதியும் விட்டார்கள். எழுதியது எதையும் நான் படித்தில்லை. இது எனக்கு முழுக்க அனுபவமான ஒரு படம். என் அனுபவத்திலிருந்தே இதை எழுதிகிறேன். இப்படம் சினிமாக்களில் ஒரு கிளாசிக் அதை பற்றி பேச வேண்டியிருந்து கொண்டுதானிருக்கும்.
1950 – 1980ம் ஆண்டுகளில் அமெரிக்காவில் அதிபர்களின் வாழ்க்கை, வியட்நாம் போர், வியட்நாம் போரின் எதிர்ப்பு இயக்கம், கருப்பின நியாயங்களுக்கான எழுச்சி, ஹிப்பி இயக்கம் என சமூக அரசியல் நிகழ்வுகள். பிரபல கலைகளில் ஏற்படும் அலைகளும் மாற்றங்களும் உருவாகும் நட்சத்திரங்கள். விளையாட்டு துறையின் திருப்பங்கள். Nike முதல் Apple வரை இன்றும் செல்வாக்கு செலுத்தும் ஏராளமான Brandகளின் என வளர்ச்சி என இந்த இடைபட்ட ஆண்டுகளின் அமெரிக்க சமூக வரலாற்று பின்னணியில் நிகழ்கிறது இக்கதை. இலக்கு இல்லை என்றாலும் தற்செயல்களின் வாயிலாக இதன் அனைத்து உச்சங்களிலும் பங்கு கொண்டு வெற்றிகொள்ள நேரும் கதாநாயகனும், அதே சமையங்களில் இந்த பொதுசமூக லட்சியங்களை தன் இலக்காக கொண்டு அழிவின் விளிம்பு வரை செல்லும் சில துணை கதாபாத்திரங்களும், இதுதான் கதையின் இயக்கம்.
கதாநாயகன் ஃபாரஸ்ட் நாம் நம் சொந்த வாழ்வில் காண வாய்பற்ற ஒரு மனிதன். பிறபாத்திரங்கள் நமக்கு பரிச்சியமானவர்கள் தான். ஃபாரஸ்ட் சமூக பொது மனதின்படி இல்லாமல் விலக்கியவன், அல்லது முற்றிலும் வேறு ஒரு மன அமைப்பு கொண்டவன். அதை பற்றிய தாழ்வும் அல்லது தயக்கமும் கொண்டவன். அந்த மனதை அவன் வேண்டி உருவாக்கி கொள்ளைவில்லை. அவனுடைய இயல்பாவே அமைந்தது அது. அதனால் ஃபாரஸ்ட் செய்வதெல்லாம் ஒன்றுதான் பிறர் கூறும் பாடங்களை கேட்டு கட்சிதமாக அதன்படி நடப்பது. சுயமாக அவன் எந்த முடிவையும் எடுப்பதில்லை, தவிர்க்க முடியா சில உச்ச தருணங்களை தவிற. ஆனால் ஃபாரஸ்ட் தனக்கே தெரியாமல் பிறருக்கு பாடங்களையும் வழிகளையும் காட்டுகிறான்.
வாழ்க்கை தற்செயல்களால் ஆன ஒன்றா அல்லது வாழ்க்கைக்கு இலக்கு என்று ஒன்று உண்டா என்ற அடிப்படையான கேள்வியோடு முன் நகருகிறது படம்.
இப்படத்தின் இறகு படிமம் தமிழ் கவிஞர் “பிரமீள்”–ளுடையதும் கூட. படத்தில் இறகு காற்றின் தீராத பக்கங்களில் ஃபாரஸ்ட் கம் வாழ்கையையும் எழுதிச் செல்கிறது.
Forrest Gump திரைப்படத்தை “லவ்கீக வாழ்வின் கீதை” என்று சொல்லலாம். Forrest Gump கதாபாத்திரம் கீதையின் கரமயோகத்தின் மைய சாரமான ‘பலன் நோக்காது செயல்படு’ என்பதை பெரிய அளவில் நெருங்கும் கதாபாத்திரம். அதை ‘ involved or attached with inner detachment’ என்று சொல்லலாம்.
இப்படத்தின் லட்சியவாதம் அல்லது இலக்கு கொண்ட கதாபாத்திரங்கள் :

Jenny: இப்பாத்திரம் பிரபல பண்பாட்டால் வதைபடும் ஒருவள். மிக பிரபலமான பாடகியாகி அனைவராலும் கொண்டாடப்பட்டு, பிறர் ஏங்கும் ஒரு வாழ்க்கையை லட்சியமாக கொண்டவள். அதை அடைய எந்த எல்லை வரையும் செல்லக் கூடியவள். அதற்கு துளி அன்பை கூட பெறாத கொடுமைகளை, சுரண்டல்களை மட்டும் உடைய குழந்தை பருவத்தை கொண்டது காரணம்.”அசடன்” நட்டாசியாவை ஒத்த அதே வாழ்க்கை. அவர்களின் வாழ்க்கை பின்னணி அந்த உச்சத்தை நோக்கி செலுத்துகிறது போலும். அனைவரும் தன்னை வியந்து கொண்டாடுவதன் மூலம் இழந்ததை மீட்டுக்கொண்டுவிட முயலும் மனம் அது. ஒரு கட்டத்தில் தன் இலக்கை சென்றடைய முடியாமல் எல்லா கீழ்மைகளுக்குள் செல்கிறாள்.போதை அடிமையாக ஆகிறாள். அனைவரையும் தன்னை சுரண்ட அனுமதிகிறாள். மேலும் மேலும் கீழ்மைக்கு சென்று தன்மீதான வெறுப்பை பெருக்கி கொள்கிறாள். தற்கொலையின் விழிம்புவரை செல்கிறாள். இது அனைத்திற்கும் மைக்கெல் ஜேக்சன் முதல் ராபின் வில்லியம்ஸ் வரை அங்கு உதாரணம் உண்டு. இறுதியில் ஃபாரஸ்டின் மூலம் குழந்தைக்கு தாயாகி இயல்பான வாழ்க்கைக்கு வந்து மீள்கிறாள். என்னவென்றால் ஃபாரஸ்டின் அன்பின் மூலம் மீட்புபெருவதிலிருந்து அவள் தப்பித்துக்கொண்டே இருந்தாள். அது அவளுக்கேகூட தெரியாது.

Lieutenant Dan: இப்பாத்திரத்தின் தன்மை பற்றி Megalomaniac என்ற இந்த ஆங்கில வார்தையால் குறிப்பிடாலாம். தன்னை, தன்முக்கியத்துவத்தை, தன் அதிகாரத்தை பற்றிய மிதமிஞ்சிய கற்பனை. ஒரு கட்டத்திற்கு மேல் அக்கற்பனையை உண்மை என்றே நம்பி வாழ்வது. உண்மையில் லெப்டினன்ட் டேனுக்கு வியட்நாம் பற்றி, அதன் தட்பவெப்பம் பற்றி, போர்சூழல்கைகள் பற்றி ஒன்றுமே தெரியாது. வரலாற்றில் தான் இப்படி இடம்பெற வேண்டும், பின்வரும் சந்ததியர் தன்னை இப்படி பார்க்க வேண்டும் என்று தனக்குத்தானே ஒரு புனைவை உருவாக்கி கொண்டு அந்த கதாபாத்திரமாக ஒரு கட்சிதமான கதையை வாழ்ந்து முடிப்பதுதான் அவர் நோக்கம். பரம்பரை பரம்பரையாக அமெரிக்க நாட்டின் ஒவ்வொரு போரிலும் அவர் குடும்ப முன்னோர்கள் வீர மரணம் அடைந்திருக்கிறார்கள். எனவே லெப்டினன்ட் டேனுக்கு போரில் வெற்றி தோல்வி கூட முக்கியமில்லை. தன் வீரர்கள் பற்றி யோசனையில்லை. அவருக்கு குண்டடி பட்டு இறந்து, அந்த வரலாற்று பெருமை மிக்க வீரமரண வரிசை பட்டியலில் இடம்பெற்றாக வேண்டும் அவளதான். ஆனால் வரலாறு என்பது தான் என்ன. வரலாற்றில் இடம்பெறுவது தான் ஒட்டுமொத்த வாழ்க்கையா அல்லது நோக்கமா. இறுதியில் தன் கால்களை இழந்து தோல்வி உணர்வில் சுயவெறுப்பில் கீழ்மையில் உழலும் லெப்டினன்ட்டை தனக்கே தெரியாமல் மீட்டு வாழ்க்கையை காட்டுகிறான் ஃபாரஸ்ட். இறுதியில் வறட்டு நாட்டு பெருமிதத்தை கடந்து புதிய காதல் ஒன்றுக்குள் சென்று அவர் மகிழ்ந்திருப்பது அழகானது. அந்த லெப்டினன்ட் டேனை பார்த்து ஃபாரஸ்ட் வியக்கிறான்.

Bubba: இதை குழந்தைதனமான பகல் கனவு வாழ்க்கை என்று சொல்லலாம். பத்தாம் வகுப்பு அறிவியல் வகுப்பில், இறுபத்தொன்பது வயது ரயில் பயணத்தில், குழந்தைகளோடு நாற்பதுகளின் இறுதியில் உயர்பதவியில் இருக்கும்பொழுது, தான் இருக்கும் வாழ்க்கையில் இருந்து செயலை துவங்காத பகல் கனவு வாழ்க்கையில் வாழ்தல். அந்த பகல் கனவு கொடுக்கும் நிறைவே போதுமானதாக இருந்துவிடுதல். பாபாவுக்கு தன் குடும்ப தொழிலான shrimping business-ஐ செய்துவிட வேண்டும் என்பது ஆசை. வியட்நாமின் போர்களில் இருந்துக்கொண்டு எப்பொழுதும் அதை பற்றியே பேசுகிறான், சிந்திக்கிறான். விட்டு உதறி சென்று அச்செயலை துவங்கமுடியவில்லை. அதற்கு அடிதட்டில் ஒடுக்கபட்ட அவன் இனத்தின், குடும்பத்தின் சூழ்நிலையும் பொருளாதாரமும் காரணம். ஆனால் பாபா களத்தில் குண்டடி பட்டு சாகிறான். உண்மையில் பகல் கனவில் வாழ்வது என்பது இறந்த, நிகழாத வாழ்வை வாழ்வதுதான்.
படத்தின் இந்த மூன்று லட்சியவாத கதாபாத்திரங்களில் ஜென்னியின் ‘மூர்கமான பிரபல பண்பாட்டு லட்சியம்’, லெப்டினன்டின் ‘தன்கற்பித வரலாற்று வாழ்க்கை’, பாபாவின் ‘பகல் கனவு வாழ்க்கை’, இது மூன்றும் செயலின், லட்சியத்தின் முதல் சில படிகளில் ஊக்கியாக இருப்பவை. தவிர்க்க முடியாதவையும் கூட. இந்த பாத்திரங்களுக்குகான மூன்று வகை லட்சிங்கள் உருவாக மிக பெரிய செல்வாக்கை செல்த்துவது அவரகளின் மூன்றுவைகாயான வாழ்கையை பின்னனி என்பதை நாம் படத்தில் பார்களாம். மூர்கமான பிரபல பண்பாட்டு லட்சியத்தால் தான் நாம் இன்று பார்க்கும், ரசிக்கும் கலை அற்புதங்கள் நிகழ்ந்துள்ளன. மானுட ரசனை கூடியிருக்கிறது. வரலாற்று வாழ்க்கையை தன் லட்சியமாக கொண்ட எத்தனைபேரால்தான் நாம் இன்று இச்சமூகத்தில் இப்படி வாழ்ந்து கொண்டிருக்கிறோம் அனைத்து வகைகளிலும் மேம்பட்டிருக்கிறோம். பகல் கனவு லட்சியங்கள் தான் தனிமனிதனின் சமூக கூட்டுமனதின் உள்ளுரைந்த ஆசைகள். முந்தி பகல் கனவாக இருந்த ஒன்றுதான் பின்னாளில் நிஜம். இன்று வாழும் நாம் அனைவரும் இத்தகைய லட்சியவாதிகளுக்கு நன்றிக்குட்பட்டவர்கள். ஆனால் பலன்நோக்கா செயல் தான் செயலின் துயரத்திலிருந்து மானுட வாழ்வின் துயரத்திலிருந்து மீட்பளிக்க முடியும். அந்த வகையில் இக்காதாபாத்திரங்கள் தவறான லட்சிய முன் உதாரணங்கள் என்றே கொள்ள வேண்டும்.
Forrest Gump-ன் அம்மா :

ஃபாரஸ்டின் அம்மா மனிதர்களை நன்றாக அறிந்தவள். அவளின் அறிதல்களை குழந்தையிடம் சொல்லி வளர்ப்பவள். துவக்கம் முதல் இறுதி வரை ஃபாரஸ்டுக்கு அறிவுறைகளை வழங்கியபடி இருக்கிறாள். ஃபாரஸ்டும் எப்பொழுதும் “my mama always said” என்று அவளின் வரிகளை சொல்லியபடி இருக்கிறான். குறிப்பாக ஃபாரஸ்டின் அம்மாவிற்கு ஆண்களை பற்றி தெரியும். மகனை சகஜ மாணவர்கள் பள்ளியில் சேர்க்க தலைமை ஆசிரியருடன் அவள் செலவிடும் இரவும், vacation என்பதற்காக அவள் தரும் விளக்கமும் அதற்க்கு உதாரணம். கால் ஊனமாக இருக்கும் ஃபாரஸ்டிடம் நீ எந்தவகையிலும் குறைந்தவன் இல்லை, நீ எல்லாரையும் போல் தான் என்று சொல்லி வளர்க்கிறாள். தன் கணவன் தன்னை விட்டு சென்றதிலிருந்து மனிதர்கள் மீதான insecurity யை அடைகிறாள். அதை பாடமாக யாரையும் அவளவு எளிதில் நம்பிவிடாதே கவனமாக இரு என தன் மகனுக்கு புகட்டியபடி இருக்கிறாள். மிரண்டவள் போல் எல்லா சூழ்நிலைகளிலும் ஒருவித பதட்டம் அவள் உடலிலும் முகத்திலும் உள்ளதை நாம் படம் முழுவதும் பார்க்கலாம். ஃபாரஸ்டின் அப்பா ஏன் விட்டு சென்றார் என்பது படத்தில் சொல்லபடவில்லை. அது நம் கற்பனைக்கே விடப்பட்டுள்ளது. ஃபாரஸ்ட் ஊனமாக பிறந்ததனால் கூட அவர் விட்டு சென்றிருக்கலாம் இல்லாயா?. படத்தின் இறுதியில் பள்ளிக்கு வேன் ஏறும் தன் மகனுக்கு தன் அம்மா மூலம் கிடைத்த அந்த insecurity பாடத்தை சொல்லி கொடுக்காமல் கடக்கிறான் ஃபாரஸ்ட். அது ஃபாரஸ்டுக்கு வாழ்க்கையில் கிடைத்த பாடம், ‘மனிதர்களை நம்பலாம்’ என்பது. அது சரியானதோ தவறானதோ பெற்றோர்கள் தங்களின் அனுபவ அறிவுகளை குழந்தைகளிடம் விதைக்கிறார்கள், தங்கள் மனநிலைகளை கடத்துகிறார்கள்.
ஃபாரஸ்டின் அம்மா Mrs Gump தற்க்காபானவளானாலும் மகனுக்காக பூரிப்புகள் அடையும் முழுக்க எளிய அன்பான அம்மா. முக்கியாமான ஒன்று என்னவென்றால் ஃபாரஸ்ட் தாயால் வளர்க்கப்பட்டவன். அப்பாவை அறியாதவன். ஆன்மையை முன்னுதாராணமாக கொள்ளாதவன். தாய்மையால் தான் அவனுடைய வழி அன்பு.
Forrest Gump-ன் கதாபாத்திரம்:

Forrest Gump-ஐ மிக சரியாக ஒப்பிடவேண்டிய இன்னொரு கதாபாத்திரம் தாஸ்தாவஸ்கியின் “அசடன்” நாவலின் கதாநாயகன் “மிஸ்கின்”. இருவருமே attached but detached தன்மை உடையவர்கள். இருவருமே லவ்கீக வாழ்வில் அசடர்கள். உதாரணமாக இவ்விரு கதாபாத்திரங்களில் காதலை பார்க்கலாம். ஃபாரஸ்ட் ஜென்னியை காதலிக்கிறான். மிஸ்கினுக்கு நட்டாசியா மீதும் அக்லோயா என இருவர் மீதும் ஒரேசமையம் காதல் மாறி மாறி மேலங்கியபடியுள்ளது. ஃபாரஸ்ட், மிஸ்கின் இருவருடைய காதலை காதல் என்பதைவிட கிரிஸ்து அன்பு என்று சொல்லலாம். அப்பெண்களை நேசிப்பதுபோல் தான் அவர்கள் பிறரையும் நேசிக்கிறார். மிக நல்லவர்களான அன்பானவர்களான ஃபாரஸ்டிடமிருந்தும், மிஸ்கினிடமிருந்தும் ஏன் அப்பெண்கள் விலகி செல்கிறார்கள். காரணம் அந்த இரு ஆண்களிடம் வெளிப்படும் ‘எனதாக்கிகொள்ளாமை’ அல்லது ‘பற்றின்மை’. ஒட்டுமொத்தமாக அந்த பெண்களின் விலக்கத்துக்குக்கான காரணத்தை இப்படி சொல்லலாம் ‘அந்த ஆண்களின் ஆன்மீக தன்மை மீதான அச்சம்’. ஃபாரஸ்டும் மிஸ்கினும் கொண்டிருப்பது காதல் அல்ல compassion. அனைத்தின் மீதான அன்பு.
Run Forrest Run :

ஃபாரஸ்ட்டுக்கு கிடைத்த முக்கியமான பாடம் ஜென்னி கொடுத்த ‘Run Forrest Run’ என்பது. அது அவளுக்கு சோள கொல்லைகளில் கிடைத்ததாக இருக்கலாம். ஃபாரஸ்டுக்கு அதுவே மந்திரமாக அமைந்து ஒவ்வொரு நெருக்கடியில் இருந்தும் அவன் ஓடுவதை கொண்டே மீள்கிறான். வியட்நாம் போருக்கு செல்லும் ஃபாரஸ்டிடம் ஜென்னி சொல்கிறாள் “பிரச்சனை வந்தாள் எதிர்த்து நிற்காதே ஓடி விடு்”. ஃபாரஸ்ட் எப்பொழும் அதைதான் செய்கிறான். செய்துவிட்டு ‘எங்கும் நீ சொன்னதை மட்டும் தான் நான் செய்தேன் ஜென்னி’ என்கிறான். அம்மா, ஜென்னி என அனைவரும் பிரிந்து சென்றுவிட்ட அப்பெரிய வீட்டிலிருக்கும் சூன்யத்தை 15300 மையில்கள் ஓடி தான் கடக்கிறான். ஆனால் இதை இவனுக்கு சொல்லிக்கொடுத்த ஜென்னி தன் வாழ்க்கையில் அதை துளியும் கடைபிடிக்காததுதான் வாழ்வின் விசித்திரம்.
மற்றொரு முக்கியமான அம்சம், ஃபாரஸ்ட் கம்ப்பின் கால் ஊனத்தின் குறியிட்டு தன்மை. இக்கதையில் ஏன் ஃபாரஸ்டுக்கு ஊனமான காலாகயிருந்து பின் சரியாக வேண்டும். அதை புரிந்துகொள்ள முடியும், என்னால் முடிந்த வரை அதை இப்படி விளக்கிகொள்ள முயல்கிறேன்.
கால் ஊனமானதாக ஆவதனால் ஒருவனக்கு புற ரீதியாக நிகழ்வது உடல் முடக்கம். ஆனால் அக ரீதியாக நிகழ்வது பிறரைபோல் இயங்கமுடியாது என்ற ஒப்பீட்டு தாழ்வு மனநிலை. தன் இலக்கை நோக்கி செல்லமுடியாது என்ற நம்பிக்கையிழப்பு, தன் இயலாமையால் உருவாகும் கழிவிரக்கம். ஒரு லட்சியத்தை நோக்கி செல்லும் ஒருவனுக்கு தடைகள் ஏற்பட்டால் அவனுக்கு வரும் உணர்வும் அதுதான். ‘தடை புற ரீதியானது இல்லை அக ரீதியானது’ என்பதை தான் அவன் அம்மா அவனுக்கு உணர்த்த முயல்கிறாள். ஜென்னியும் அவனை அதிலிருந்து விலகி ஓட தான் சொல்கிறாள். முதல் முதலில் ஃபாரஸ்டின் கால்தாங்கி உடைந்து விழுவதற்கான காரணம் அவன் முதலில் அதை அக ரீதியாக கடந்ததால் தான். ‘விலகி விடு’ இதுதான் அது சொல்வது.
வாழ்க்கையில் தற்செயல்கள் :

ஒரு இறகு தன் காலடியில் வந்து விழுவதனால் அவன் கதையை நாம் அறிய நேர்வதிலிருந்து, ஃபாரஸ்ட் என்ற பெயர் காரணம் வரை படத்தின் முழுவதும் காரணகாரிய மற்ற வாழ்வின் அபத்த தற்செயல்களால் இயக்கபடுகிறான் ஃபாரஸ்ட். ஒவ்வொன்றையும் இங்கு பட்டியல் போடவேண்டியதில்லை. பெரும் வரலாறுகள் கூட தற்செயல் நிகழ்வு தொகுப்பு பாதிக்கப்படுகிறது.
இங்கு முக்கியமானது என்னவென்றால் இந்த தற்செயல் நிகழ்வுகள் மூலம் அவன் அடைந்த உச்சங்கள் எதுவும் அவன் நோக்கும் இலக்கு இல்லை என்பது. அவனுக்கு அவ்வெற்றிகளில் பொருள்லில்லை. ஆனால் சுற்றியிருக்கும் சமூகம் அவ்வெற்றிகளுக்காக ஏக்கம் கொண்டு முயன்றபடியிருப்பது என்பதுதான்.
அடுத்து உண்மையில் ஒருவனுக்கு இவ்வளவு தற்செயல்கள் நடக்கமுடியமா அது இவ்வளவு உயரத்துக்கு கொண்டு போகுமா. அப்படி நடக்கமுடியாது. சிலருக்கு நடக்கலாம், ஓரிரு முறை. ஃபாரஸ்ட்டை போல் பெரியவை இல்லை என்றாலும் சிறிய தற்செயல்களால் ஆனது வாழ்வு. பின் ஏன் இவ்வளவு வேறுபாட்டோடு சித்தரிக்கப்படுகிறது என்றால் வாழ்வின் இயங்குமுறையை நமக்கு காட்டத்தான்.
ஃபாரஸ்டை அனைதிலிருந்தும் காப்பாற்றும் அதே தற்செயல், பாபாவை கொல்கிறது. அதைத்தான் ஃபாரஸ்டும் தன்னை சுற்றி நிகழ்வனவற்றில்பார்க்கிறான். ஆம், வாழ்க்கை தற்செயலால் ஆனது, சில நேரம் கொடூரமாக. ஒரு வண்டியின் ரோதை ஏறி, இடி இடித்து, பாம்பு கொத்தி எந்த மாபெரும் திறனாளனும் எப்பொழுதும் இறக்கலாம். மரணத்தின் அருகில் தான் நாம் விளையாடி கொண்டிருக்கிறோம் அல்லது பாகுபாடு நிறைந்ததும் அற்றதுமான இயற்கை நம்மை வைத்து விளையாடுகிறது. ஒரு கொசு பேட் சுற்றி வரும் அறையில் ஒரு கொசுவினுடையது நம் வாழ்க்கை. அதுதான் இப் பிரம்மாண்டத்தின் அப்பட்டம் அது லீலை என்று சொல்லப்படுகிறது. அந்த அப்பட்டத்தை பார்த்து புன்னகைக்கும் வகையில் ஏற்றுக்கொண்டு தான் அடுத்தபடி எடுத்துவைக்க வேண்டும். பேட் நம்மை நெருங்கவற்குள் ஜாலியாக இருந்துவிடலாம் என்னும் வகையில்தான் பெரும்பாலும் வாழ்க்கை அமைந்துவிடகிறது. சிலவற்றை மறந்தார்போல் இருந்துவிட கூடாது.
அறிதலுக்கு விடுதலைக்கு அன்பு வழி, அறிவு வழி,செயல் வழி என பல வழிகள் உண்டு,அது நம் இலக்குகளாக இருக்களாம். அதில் தன் இயல்பு வழியை அறிந்து செயல்பட வேண்டும். இயல்பறிந்து செயல்படவில்லை என்றால், ஃபாரஸ்ட் பின்னால் ஓடிவந்து அவன் நின்றதும் திக்கி நிற்கும் கூட்டமாக ஆவோம்.

விடைக்கான வாசல்:
Forrest Gump, படம் முழுக்க தன் அனுபவங்களிலிருந்து பெறும் அறிவை எளிமையாக விளங்கி அழகிய சொற்றொடர்களாக ஆக்குபவன். அவை நகைச்சுவையாக, அசட்டுதனமாக இருந்தாலும் கடுமையான பொருளோடும் இருக்கும். உதாரணத்திற்கு ஒரு அண்ணன் செய்த தவறுக்கு சுட்டுக் கொல்லபடும் தம்பியை பற்றிய செய்தியை கேள்விப்படும் பொழுது “அண்ணன் இருக்ககூடாது போல” என்கிறான்.
Forrest Gump இறுதியாக சொல்கிறார்:
“I don’t know if we each have a Destiny. Or if we’re all just floating around accidental- like on a Breeze, but I think may be it’s both. May be both is happening at the same time”.
ஒன்று: இத்திரைபடம் மானுட வாழ்விலிருந்து பிரபஞ்ச இயக்கம் பற்றிய அடிபடை புரிதல் ஒன்றுகான வாசல். இரண்டு: விலகுவதன் மூலம் விடுதலை அடையமுடியும் என்பது.


***
[28-1-2021]