வியக்க பழகிய நாள் பகவத் கீதை| சாங்கிய யோகம்| பாடல் 29 இந்த ஆத்மாவை“வியப்பென ஒருவன் காண்கிறான்வியப்பென ஒருவன் சொல்கிறான்வியப்பென ஒருவன் கேட்கிறான்கேட்கினும், இதனை அறிவான் எவனுமிலன்” ** ஒரு காப்பியை குடித்துவிட்டு வந்து இதை எழுத துவங்குகிறேன். எதையாவது எழுத வேண்டும் என்ற மனநிலை நான் முதன் முதலில் டார்வின் என்ற சொல்லை எப்படி கேட்டேன் என்பதை குறித்ததுதான் இது. நான் நான்காவது படித்த போது நான் படித்த கிருஸ்த்துவ பள்ளியில் நண்பர்கள் மத்தியில் “கடவுள் […]
ஓர் தந்தையர் தினம் நேற்று அப்பா வழக்கமாக அழைக்கும் நேரமில்லாத வேறு ஒரு நேரத்தில் அழைத்திருந்தார். வாட்ஸ்அப்பில் அனுப்பியதை படித்தாயா என்று கேட்டார். நான் இன்னும் படிக்கவில்லை என்று சொன்னேன். இன்று தந்தையர் தினம் போலயே, அதான் அப்பத்தாட்ட அதோட அப்பாவ பத்தி சொல்லசொல்லி கேட்டு எழுதுனன், படிச்சுட்டு சொல்லு என்றார். அவ்வப்போது அப்பா இப்படி எழுதி அனுப்பும் வழக்கம் உருவாகியுள்ளது. அப்படி, கரண்ட்டே இல்லாத காலக்கட்டம் ஒன்றின் நிகழ்வு வாட்ஸ்அப் வழியாக நேற்று எனக்கு வந்து […]
ஏன் நாட்கள் ஒன்றுபோல் இல்லை, முகங்களும்
ஏன் நாட்கள் ஒன்றுபோல் இல்லை, முகங்களும். ஏன் மகிழ்ச்சியின் உன்மத்ததின் சில நாட்கள் ? பின் ஏன் சில துயரமான நாட்கள். சுழற்ச்சியா இது ? என்னில் நான் நிறைவடைந்த நாட்களில் செல்லும் நடைதான் எத்தனை அழகானது. என் காதல் கொடுத்த பேரின்பம் உண்மையில் எவ்வளவு பெரியது.. பின் வீழ்ச்சியும் அழுகையும் மண்டைபிளக்கும் கோவமும் ஏன் அரங்கேறியது. தொடர் போராட்டமும் துயரமும். குடி புகை கழிவிரக்கம், மனநோய். August 4 1997 என் பிறந்தாநாள் – (தகவளுக்கு […]
தமிழில் இருக்கும் பின் நவீனத்துவ நாடக இயக்கம் : உரையாடல்
தமிழில் இருக்கும் பின் நவீனத்துவ நாடக இயக்கம் – உரையாடல் விக்னேஷ் ஹரிகரன் இந்த மே மாத சொல்வனம் இதழில் “நமக்குத் தேவை நவீன நாடகங்கள்” என்ற கட்டுரையை எழுதி இருந்தார். அதில் ச. முருகபூபதி யின் இடம் சரியாக மதிப்பிடபடவில்லை என்று நினைத்தேன். அதேபோல அவர் நாடக கலை செல்ல வேண்டிய திசை என்பதை குறித்து சொல்லும் கருத்துக்களோடும் நான் மாறுபட்ட கருத்துக்களை கொண்டுள்ளதால் இந்த பதிவை எழுதுகிறேன். *** பொது பார்வையாளர்கள் என்பது யார்? […]
திருச்சியில் பிஷ்ப் ஹீபர் கல்லூரியும் சிற்றில் இலக்கிய அமைப்பும் சேர்ந்து நடத்திய “பகலில் துவங்கும் வாணவேடிக்கை” என்ற சுரேஷ்குமார இந்திரஜித் புனைவுலகம் பற்றிய கருத்தரங்கில் அவரின் குறுங்கதைகள் பற்றி பேசினேன். Pradeep Kennedy speech | சுரேஷ்குமார இந்திரஜித் புனைவுலகம் | குறுங்கதைகள் அமர்வு | பிரதீப் கென்னடி
பூவை அணுகும் வண்டு பூவின் இசையைக் கேட்கலாம். பிரதீப் கென்னடியின் இந்த கவிதையில் பூத்த மலர் இசையைக் கேட்கிறது. ‘பூத்த மலர் கேட்பது இசை’ என்ற வரியை ஒரு கவிஞன் பித்து நிலையில் மட்டுமே எழுத முடியும். பித்து நிலை கவிதையை அணுகும் கருவி. பூத்த பித்து கேட்பதும் கவிதையைத் தான். பூத்த மலர் கேட்பது இசை – மதார் கவிதைகள் இதழ்
இரு அன்னைகள்: சுரேஷ்குமார இந்திரஜித் குறுங்கதைகள்
இரு அன்னைகள்: சுரேஷ்குமார இந்திரஜித்தின் குறுங்கதைகள் முதலில் டெஸ்ட் கிரிக்கெட் கண்டுப்பிடிக்கப்பட்டு உலகம் முழுவதும் விளையாடப்பட்டு ரசிக்கப்பட்டு வந்தது. அதற்க்கு பதிலாக அப்பொழுதே டி.20 கிரிக்கெட் அறிமுகமாகியிருந்தால் அது மிகவும் சளிப்புதரக்கூடிய வடிவமாக இருந்திருக்கும். ஏன் ஒரு காலக்கட்டம் காலத்தை போக்குவதையும் மற்றொரு காலக்கட்டம் விறுவிறுப்பையும் தன் இயல்பாகவும் கொண்டிருக்கிறது. முக்கியமாக, இது போன்ற வடிவங்கள் ஏன் பெரியவையில் இருந்து சின்னது நோக்கி நகர்கிறது. முதலில் டெஸ்ட் கிரிகெட்டும் அடுத்து ஒருநாள் போட்டியும் அதன் பின் இருபது […]
பஷீரின் புன்னகைக்கு பின்னால் பஷீரின் இந்த போஸ்டர் அதிகம் பகிரபடுவதை பார்க்கிறேன். நானும் இதை பத்திரப்படுத்தி வைத்து கொண்டேன். பஷீரை நாம் எழுத்தாளர்களில் ஒரு மெய் ஞானியாக கேள்விப்பட்டிருப்போம். ஆனால் பஷீர் பைத்தியமாக இருந்திருக்கிறார். பல முறை மன நல மருத்துவமனைகளில் இருந்துள்ளார், அந்த காலகட்டங்களில் யார் கட்டுபாட்டையும் மீறி பிறரை தாக்குபவராகவும் பொருட்களை உடைப்பவராகவும் படித்திருக்கிறேன். தன் ஆரம்பகால கதைகள் பலவற்றை எதிர்மறை தன்மை ஓங்கி இருப்பதாக அவரே அழித்துவிட்டதாக படித்திருக்கிறேன். இந்தியாவில் நவீனத்துவ காலக்கட்டம், […]
அஜீதன் உரை – விவாதம் அஜிதன் ஏற்புரை | ‘மருபூமி’ சிறுகதை தொகுப்பு வெளியீடு | Ajithan speech https://www.jeyamohan.in/195671 அஜீதனின் உரை கேட்டேன் அவர் சொல்வதை போல கரடுதட்டி போயிருந்த மரபுக்கு எதிராக அமைந்ததுதான் நவீனத்துவம். மரபு முன்வைத்த விழுமியங்கள் நம்பிக்கைகளை நவீனத்துவம் எதிர்த்தது. மரபு மதம் சொல்லும் அல்லது அதன் இலக்கிய முகங்கள் சொல்லும் நம்பிக்கைகளில் உள்ளடங்கியவந்தான் ஒரு தனிமனிதன் என்று சொன்ன போது அதை நவீனத்துவம் இல்லை என்று சொன்னது. அதேபோல மரபு […]
ஜார்ஜ் சாண்ட், தஸ்தயேவ்ஸ்கி - விவாதம்: என் கடிதம்
ஜார்ஜ் சாண்ட், தஸ்தயேவ்ஸ்கி -விவாதம் : என் கடிதம் ஜார்ஜ் சாண்ட், தஸ்தயேவ்ஸ்கி – விவாதம் அன்புள்ள ஜெ, சைதன்யா எழுதிய ‘நிலவறை மனிதனின் அன்னை’ கட்டுரை வாசித்தேன். இந்த கட்டுரையும் சரி, சென்ற இதழில் வெளியான ‘அந்த விடியலின் பேரின்பம்’, விக்னேஷ் ஹரிஹரன் எழுதிய ‘விலாஎலும்பின் விடுதலைப் பிரகடனம்’ ஆகிய கட்டுரைகளும் சரி, அறிவார்ந்தவை. முற்றிலும் ஐரோப்பிய உலகம், அதன் வரலாறு ஆகியவற்றில் கால் ஊன்றி அவற்றின் சிந்தனை மற்றும் அழகியல் அரசியல் போக்குகளை ஆராய்பவை. […]