| M | T | W | T | F | S | S |
|---|---|---|---|---|---|---|
| 1 | 2 | 3 | 4 | |||
| 5 | 6 | 7 | 8 | 9 | 10 | 11 |
| 12 | 13 | 14 | 15 | 16 | 17 | 18 |
| 19 | 20 | 21 | 22 | 23 | 24 | 25 |
| 26 | 27 | 28 | 29 | 30 | 31 | |

ஏன் நாட்கள் ஒன்றுபோல் இல்லை, முகங்களும்
ஏன் நாட்கள் ஒன்றுபோல் இல்லை, முகங்களும். ஏன் மகிழ்ச்சியின் உன்மத்ததின் சில நாட்கள் ? பின் ஏன் சில துயரமான நாட்கள். சுழற்ச்சியா இது ? என்னில் நான் நிறைவடைந்த நாட்களில் செல்லும் நடைதான் எத்தனை அழகானது. என் காதல் கொடுத்த பேரின்பம் உண்மையில் எவ்வளவு பெரியது.. பின் வீழ்ச்சியும் அழுகையும் மண்டைபிளக்கும் கோவமும் ஏன் அரங்கேறியது. தொடர் போராட்டமும் துயரமும். குடி புகை கழிவிரக்கம், மனநோய். August 4 1997 என் பிறந்தாநாள் – (தகவளுக்கு […]
தமிழில் இருக்கும் பின் நவீனத்துவ நாடக இயக்கம் : உரையாடல்
தமிழில் இருக்கும் பின் நவீனத்துவ நாடக இயக்கம் – உரையாடல் விக்னேஷ் ஹரிகரன் இந்த மே மாத சொல்வனம் இதழில் “நமக்குத் தேவை நவீன நாடகங்கள்” என்ற கட்டுரையை எழுதி இருந்தார். அதில் ச. முருகபூபதி யின் இடம் சரியாக மதிப்பிடபடவில்லை என்று நினைத்தேன். அதேபோல அவர் நாடக கலை செல்ல வேண்டிய திசை என்பதை குறித்து சொல்லும் கருத்துக்களோடும் நான் மாறுபட்ட கருத்துக்களை கொண்டுள்ளதால் இந்த பதிவை எழுதுகிறேன். *** பொது பார்வையாளர்கள் என்பது யார்? […]
உரை
திருச்சியில் பிஷ்ப் ஹீபர் கல்லூரியும் சிற்றில் இலக்கிய அமைப்பும் சேர்ந்து நடத்திய “பகலில் துவங்கும் வாணவேடிக்கை” என்ற சுரேஷ்குமார இந்திரஜித் புனைவுலகம் பற்றிய கருத்தரங்கில் அவரின் குறுங்கதைகள் பற்றி பேசினேன். Pradeep Kennedy speech | சுரேஷ்குமார இந்திரஜித் புனைவுலகம் | குறுங்கதைகள் அமர்வு | பிரதீப் கென்னடி
கவிதைகள்.இன் இதழில்
பூவை அணுகும் வண்டு பூவின் இசையைக் கேட்கலாம். பிரதீப் கென்னடியின் இந்த கவிதையில் பூத்த மலர் இசையைக் கேட்கிறது. ‘பூத்த மலர் கேட்பது இசை’ என்ற வரியை ஒரு கவிஞன் பித்து நிலையில் மட்டுமே எழுத முடியும். பித்து நிலை கவிதையை அணுகும் கருவி. பூத்த பித்து கேட்பதும் கவிதையைத் தான். பூத்த மலர் கேட்பது இசை – மதார் கவிதைகள் இதழ்
இரு அன்னைகள்: சுரேஷ்குமார இந்திரஜித் குறுங்கதைகள்
இரு அன்னைகள்: சுரேஷ்குமார இந்திரஜித்தின் குறுங்கதைகள் முதலில் டெஸ்ட் கிரிக்கெட் கண்டுப்பிடிக்கப்பட்டு உலகம் முழுவதும் விளையாடப்பட்டு ரசிக்கப்பட்டு வந்தது. அதற்க்கு பதிலாக அப்பொழுதே டி.20 கிரிக்கெட் அறிமுகமாகியிருந்தால் அது மிகவும் சளிப்புதரக்கூடிய வடிவமாக இருந்திருக்கும். ஏன் ஒரு காலக்கட்டம் காலத்தை போக்குவதையும் மற்றொரு காலக்கட்டம் விறுவிறுப்பையும் தன் இயல்பாகவும் கொண்டிருக்கிறது. முக்கியமாக, இது போன்ற வடிவங்கள் ஏன் பெரியவையில் இருந்து சின்னது நோக்கி நகர்கிறது. முதலில் டெஸ்ட் கிரிகெட்டும் அடுத்து ஒருநாள் போட்டியும் அதன் பின் இருபது […]
பஷீரின் புன்னகைக்கு பின்னால்
பஷீரின் புன்னகைக்கு பின்னால் பஷீரின் இந்த போஸ்டர் அதிகம் பகிரபடுவதை பார்க்கிறேன். நானும் இதை பத்திரப்படுத்தி வைத்து கொண்டேன். பஷீரை நாம் எழுத்தாளர்களில் ஒரு மெய் ஞானியாக கேள்விப்பட்டிருப்போம். ஆனால் பஷீர் பைத்தியமாக இருந்திருக்கிறார். பல முறை மன நல மருத்துவமனைகளில் இருந்துள்ளார், அந்த காலகட்டங்களில் யார் கட்டுபாட்டையும் மீறி பிறரை தாக்குபவராகவும் பொருட்களை உடைப்பவராகவும் படித்திருக்கிறேன். தன் ஆரம்பகால கதைகள் பலவற்றை எதிர்மறை தன்மை ஓங்கி இருப்பதாக அவரே அழித்துவிட்டதாக படித்திருக்கிறேன். இந்தியாவில் நவீனத்துவ காலக்கட்டம், […]