| M | T | W | T | F | S | S |
|---|---|---|---|---|---|---|
| 1 | 2 | 3 | 4 | |||
| 5 | 6 | 7 | 8 | 9 | 10 | 11 |
| 12 | 13 | 14 | 15 | 16 | 17 | 18 |
| 19 | 20 | 21 | 22 | 23 | 24 | 25 |
| 26 | 27 | 28 | 29 | 30 | 31 | |

அஜீதன் உரை - விவாதம்
அஜீதன் உரை – விவாதம் அஜிதன் ஏற்புரை | ‘மருபூமி’ சிறுகதை தொகுப்பு வெளியீடு | Ajithan speech https://www.jeyamohan.in/195671 அஜீதனின் உரை கேட்டேன் அவர் சொல்வதை போல கரடுதட்டி போயிருந்த மரபுக்கு எதிராக அமைந்ததுதான் நவீனத்துவம். மரபு முன்வைத்த விழுமியங்கள் நம்பிக்கைகளை நவீனத்துவம் எதிர்த்தது. மரபு மதம் சொல்லும் அல்லது அதன் இலக்கிய முகங்கள் சொல்லும் நம்பிக்கைகளில் உள்ளடங்கியவந்தான் ஒரு தனிமனிதன் என்று சொன்ன போது அதை நவீனத்துவம் இல்லை என்று சொன்னது. அதேபோல மரபு […]
ஜார்ஜ் சாண்ட், தஸ்தயேவ்ஸ்கி - விவாதம்: என் கடிதம்
ஜார்ஜ் சாண்ட், தஸ்தயேவ்ஸ்கி -விவாதம் : என் கடிதம் ஜார்ஜ் சாண்ட், தஸ்தயேவ்ஸ்கி – விவாதம் அன்புள்ள ஜெ, சைதன்யா எழுதிய ‘நிலவறை மனிதனின் அன்னை’ கட்டுரை வாசித்தேன். இந்த கட்டுரையும் சரி, சென்ற இதழில் வெளியான ‘அந்த விடியலின் பேரின்பம்’, விக்னேஷ் ஹரிஹரன் எழுதிய ‘விலாஎலும்பின் விடுதலைப் பிரகடனம்’ ஆகிய கட்டுரைகளும் சரி, அறிவார்ந்தவை. முற்றிலும் ஐரோப்பிய உலகம், அதன் வரலாறு ஆகியவற்றில் கால் ஊன்றி அவற்றின் சிந்தனை மற்றும் அழகியல் அரசியல் போக்குகளை ஆராய்பவை. […]
சேப்பியன்ஸ் - மானுட வரலாற்றில் மகிழ்ச்சி
சேப்பியன்ஸ் – மானுட வரலாற்றில் மகிழ்ச்சி யூவால் நோவா ஹராரி-யின் சேப்பியன்ஸ் நூலுக்கு இரண்டு அம்சங்கள் உண்டு. ஒன்று அதனுடைய வரலாற்று அம்சம். அது இதுவரையிலான மானுட வரலாறு எப்படி நிகழ்ந்துள்ளது, வரலாற்றில் இந்த நிகழ்காலத்தை மானுடம் வந்தடைய காரணமாக இருந்த முக்கியமான நிகழ்வுகள் என்ன என்ன, என்று வரலாற்றை அது தொகுத்து முன்வைக்கும் விதம். அறிவு புரட்சி, வேளாண் புரட்சி, மனிதகுல ஒருங்கிணைப்பு, அறிவியல் புரட்சி என்ற ஐந்து பகுதிகளின் வழியாக நூல் அதை செய்கிறது. […]
அன்றாடம் பற்றி: மூன்று கவிஞர்கள்
அன்றாடம் பற்றி: மூன்று கவிஞர்கள் கடவுளே: தேவதேவன் ஒரு புதுக்காற்று ஒன்றுஅறைக்குள் சுழன்றடித்திருக்கிறது ஊதுபத்தி பூமாலைகள் திகைக்கதன் முதுகின் வெட்ட வெளியை காட்டியபடிதிரும்பியிருக்கிறார் காலாண்டர் தாளிலுள்ள கடவுள் கோபமா?சுய மறுப்பா?காட்டும் புதுய தரிசனமா வரண்டு இருண்டு விரைத்த முகம் ஒன்றுவந்தது நாங்கு ஆணிகள்மற்றும் சுற்றியலுடன் தேவதேவனின் இக்கவிதை மிகவும் பிடித்திருக்கிறது. முதல் காரணம், மனிதனின் அன்றாட தன்மையை இக்கவிதை சுட்டிகாட்டும் விதம். இரண்டாவது இதில் உள்ள நகைச்சுவை அம்சம் அல்லது கிண்டல். காற்று அதுவும் இதுவரையில்லாத புதுகாற்று […]
வாழ்வில் தற்செயலும் லட்சியமும்: Forrest Gump
வாழ்வில் தற்செயலும் லட்சியமும் : Forrest Gump இந்த கட்டுரையில் வெளிப்படும் என் தனி கருத்துகள் எவையும் என் அறுதியான கருத்துகள் அல்ல. அவற்றை நானே மறுக்க கூடும் கடக்க கூடும். அப்படியா ? என்று சிந்தித்து பாற்பதற்கான ஒரு முயற்சி மட்டுமே இது. ** வாழ்க்கையை பற்றி நாம் தத்துவார்த்தமாக அதன் பொருள் சார்ந்து யோசிக்கும் பொழுது, இந்த தற்செயல்களையும் லட்சியவாதங்களையும் வைத்து அதிகம் குழப்பிக் கொள்வோம். அது இப்படியாக இருக்கலாம் “வாழ்க்கை முழுக்க தற்செயல்களால் […]
ஆண் ஒன்று பெண் ஒன்று
ஆண் ஒன்று பெண் ஒன்று [சிறுகதை] கடவுளின் கவிதை| பாடல் 1 கடலில் விழுந்தவனை காப்பாற்றகைநீட்ட விரும்புபவனே கவனமாக இருதன் கைகளின் பலத்திற்கு மேல்கருணை கொண்டவன் அகங்காரன் ** அது காத்தாயி அம்மனுக்கு திருவிழா நாள். திருவிழா என்றாள் ஊர் கூடி கோயிலை சுத்தம் செய்து, தெய்வத்தை வரவழைத்து குறைகேட்டு குறைசொல்லி, கரகம் எடுத்து, கிடாவெட்டி உண்டு மகிழும் நாள். இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை ஆடியில் நடப்பது. முந்தினம் மாலை முதலே ஊரின் ஒவ்வொரு வீட்டுக்கும் சொந்தபந்தங்கள் […]